எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பரபரப்பான சூழ்நிலையில் சென்னை வானகரத்தில் நேற்று நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். பங்கேற்றனர். சென்னை ஐகோர்ட் அமர்வு உத்தரவுப்படி தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல் அரைமணி நேரத்தில் கூட்டம் முடிந்தது.
11.30 மணிக்கு...
அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழுக்கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய பொதுக்குழுக் கூட்டம் காலை 11.30 மணிக்கு தொடங்கியது. பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் மண்டப மேடையில், வைக்கப்பட்டிருந்த பேனரில், கட்சியின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் படங்கள் இடம்பெற்றிருந்தன.மேலும் மேடையில் போடப்பட்டிருந்த இருக்கைகளில், அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர்.
உற்சாக வரவேற்பு...
பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, கிரின்வோஸ் சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டார். அவருக்கு வழிநெடுகிலும், அ.தி.மு.க. தொண்டர்கள் மலர்களை தூவி, கோஷங்களை எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏறக்குறைய 3 மணி பயணத்திற்கு பின்னர், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு நடக்கும் திருமண மண்டபத்தை வந்தடைந்தார். அப்போது கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் எழுந்து நின்று அவரை வரவேற்றனர்.
ஒரே மேடையில்...
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் திருமண மண்டபத்திற்கு எடப்பாடி பழனிசாமிக்கு முன்பாகவே வந்துவிட்டார். அவரது வருகையின்போது, எடப்பாடியார் வாழ்க, ஒற்றைத் தலைமை வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டுதால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் மேடையில் ஒருபுறம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், மறுபுறம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அமர, இருவருக்கும் நடுவில், கட்சியின் தற்காலிக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அமர்ந்திருந்தார்.
அவைத் தலைவராக...
ஒற்றைத் தலைமை விவகாரத்தில் உச்சகட்ட சலசலப்புகளுக்கு மத்தியில், அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேடையில் வைக்கப்பட்டிருந்த கட்சியின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். கூட்டத்தை நடத்தி தருமாறு ஓபிஎஸ் முன்மொழிய, இபிஎஸ் வழிமொழிந்தார். அப்போது மேடையில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், அனைத்து தீர்மானங்களையும் இந்த பொதுக்குழு நிராகரிக்கிறது, நிராகரிக்கிறது, நிராகரிக்கிறது என்று கூறினார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
ஒற்றை தலைமை...
இனைத் தொடர்ந்து பேசிய சி.விசண்முகம், " இரட்டை தலைமையால் திமுகவை எதிர்த்து செயல்பட முடியாத நிலை உள்ளது. இரட்டை தலைமையின் செயல்பாட்டில் ஒருங்கிணைப்பு இல்லை. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலிலதா போன்று ஒற்றை தலைமை ஏற்பட வேண்டும். எனவே பொதுக் குழுவில் இரட்டை தலைமை ரத்து செய்து விட்டு ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க வேண்டும். அடுத்து பொதுக்குழு தேதியை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதன்பிறகு பேசிய அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், ஜூலை 11-ம் தேதி அடுத்த பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெறும் என்று அறிவித்தார். இதன் பின்னர் நேற்று நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நிறைவு பெறுவதாக அறிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 hour ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.