எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : தமிழக அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகிய இருவரும் மதுரைக்கு என்ன செய்தார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி எழுப்பிஉள்ளார்.
மதுரை பனகல்சாலையில் உள்ள மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் தி.மு.க., பா.ஜ.க., அ.ம.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியில் இருந்து 500 - க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அக்கட்சியில் இருந்து விலகி மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்புசெயலாளரும், மாநகர மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆளுங்கட்சியின் செயல்பாடு சரியில்லாததால் ஆளுங்கட்சியில் இருந்து விலகி நிறைய இளைஞர்கள் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். விடியலை தருவேன் என்று சொல்லிவிட்டு விடியா அரசாக இந்த அரசு இருக்கிறது. சொன்னதை எதுவுமே செய்யாததால் ஆளுங்கட்சியினுடைய நடவடிக்கை பிடிக்காமல் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். மேலும் ஆர்.எஸ்.எஸ். கட்சியிலிருந்து அ.தி.மு.க.விற்கு வந்திருக்கிறார்கள் என்றால் எங்களது கொள்கையை ஏற்று வந்திருக்கிறார்கள்.மேலும் மழை,வெள்ள பாதிப்பில் மக்களை ஆளும் அரசு கண்டு கொள்ளவில்லை.முல்லை பெரியார் அணையில் ஐந்து ஆறு முறை 142 அடியாக எங்களது ஆட்சி காலத்தில் உயர்த்தி இருக்கிறோம்.
இப்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கேரள அரசு முல்லை பெரியார் அணையில் ரூர் கேவ் என்ற முறையை கொண்டு வந்து மக்களுக்கு பாதுகாப்பற்ற முறையில் உள்ளது என உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.இந்த ரூர் கேவ் திட்டம் கொண்டு வந்தால் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அது மட்டுமல்ல நமக்கு குடிநீரும் பெரும் பிரச்சினை தான். தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே அண்டை மாநிலங்கள் பெரும் இடைஞ்சலை கொடுக்கிறார்கள்.
இந்த ரூட் கர்வ் திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடி முறையாக நடவடிக்கை எடுக்க வில்லை. பெருத்த மனக்குழப்பத்தில் இருக்கிறார்கள் மேலும் முல்லை -பெரியார் -வைகை பாசன விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மகளிர்க்கு இலவச பஸ் குறித்த கேள்விக்கு முதன்மைச் செயலாளர் கூறும் போது 8 கோடி பேர் பயனடைந்தார் அதே தவறு. முதன்மை செயலாளர் ஒரு தவறான செய்தியை சொல்லுகிறார்.கோ- பேக் மோடி என்று சொன்னவர்கள் இன்று வெல்கம் மோடி என்கிறார்களே என்ற கேள்விக்குஅமலாக்கத்துறை ரெய்டு பண்ணிடும் ஊழல் ஒழிப்புத்துறை ரெய்டு பண்ணிடும் என்ற பயம் தான்.முதல்வர் கோட் சூட் போட்டு லெஜன்ட் சரவணன் போல் வருகிறார் என்று கூறினேன் உடனே அதை மாற்றிவிட்டார்.
பாரத பிரதமர் கதர் வேஷ்டி சட்டை உடன் சென்னைக்கு வந்தார்.நாங்க எல்லாம் சொன்னதனால் முதல்வர் தப்பிச்சார் இல்லையென்றால் கோட் சூட் என போயிருந்தா ஐயோ அவ்வளவு தான் என்றார். ஜனாதிபதி தேர்தலில் பி.ஜே.பி.க்கு எதிர்த்து வாக்களித்தார்கள். வாக்களித்துவிட்டு வெற்றி பெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்ததும் திமுக டி.ஆர். பாலு தலைமையில் முதலில் மரியாதை கொடுத்தார்கள். ஜி.எஸ்.டி.பற்றி நிர்மலா சீதாராமன் புட்டு புட்டு வைத்தார்கள்.
பால், வெண்ணை, தயிர் எல்லாத்துக்கும் அவர்கள் ஒன்று போட்டால் தி.மு.க. ஒன்று போட்டு விலையேற்றம் செய்கிறார்கள். பி.ஜே.பி.யை கண்டு பயம் தான் தி.மு.க.விற்கு உள்ளது. மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறியவர்கள் பாரத பிரதமர் சென்னை வந்ததும் ஒன்றிய பிரதமர் என்று கூறவில்லையே மேடையிலே இந்திய பிரதமர் என்று கூறினார்.
பாரத பிரதமரை ஒன்றிய பிரதமரே வருக என்று சொல்லியிருக்கலாம் அல்லவா.அ.தி.மு.க.விலிருந்து யாரு விலகினாலும் கவலை இல்லை அதிமுக ஒரு கடல் போன்ற கட்சி. நிதி அமைச்சர், வணிகவரித்துறை அமைச்சர் இரு அமைச்சர்களும் மதுரைக்கு ஏதாவது திட்டம் கொண்டு வந்திருக்கிறார்களா? எந்த திட்டமும் கொண்டு வரவில்லை.
ஜி.எஸ்.டி. பற்றி அறிவு ஜீவி போல் பேசிவிட்டு வாபஸ் வாங்கி விட்டார். இன்று நிதியமைச்சர் பற்றி நிறைய வதந்திகள் வருகிறது. அவர் கமிஷன் வாங்குவதில் தான் இருக்கிறார். ஒழிய தன்னுடைய துறையை சரியாக கவனிப்பதில்லை என்று வதந்தி வருகிறது. கமிஷன் வாங்குவதில் தான் பி.டி.ஆர் இருக்கிறார் என்று தி.மு.க. கட்சிக்காரர்ளே கூறுகிறார்கள்.மேயர் சரிவர செயல்படாமல் உள்ளார்.
மாநகராட்சியின் பல பகுதிகளில் தெரு விளக்குகள் 10 நாட்களுக்கு மேலாக எரியாமல் இருக்கிறது கேட்டால் ஒப்பந்தம் போடவில்லை என்கிறார்கள். ஒப்பந்தம் ஏன் போடவில்லை என்றால் பி.டி.ஆர். கூடுதலாக கமிஷன் கேட்கிறார் அதனால் தான் ஒப்பந்தம் போட லேட் ஆகிறது என கூறுகிறார்கள்.நிதிஅமைச்சரின் செயல்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சிகளில் வில்லாபுரம் ஜெ.ராஜா, எம்.எஸ்.பாண்டியன், அண்ணாத்துரை, பா.குமார், சோலைராஜா, சக்திவிநாயகர் பாண்டியன், கு.திரவியம், எம்.எஸ்.கே.மல்லன், தளபதி மாரியப்பன், திடீர்நகர் பாலா, நாசர், எம்.ஜி.ராமசந்திரன், சோலை இளவரசன், சோலை சிலம்பரசன், விளாங்குடி கே.ஆர்.சித்தன், பகுதிசெயலாளர் கணேசன், நீதிகாந்த், அஜய் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 hour ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.
-
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்
14 Sep 2025சென்னை : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
14 Sep 2025திருச்செந்தூர் : விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது : மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு
14 Sep 2025சென்னை : ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் பொதுமக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
-
வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்: பெரம்பலூர் மாவட்டத்திற்கு நிச்சயம் மீண்டும் வருவேன் த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
14 Sep 2025சென்னை : பெரம்பலூர் மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ள த.வெ.க.
-
திருச்சியில் மர்மநபர்கள் துணிகரம்: வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளை : 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை
14 Sep 2025திருச்சி : திருச்சியில் வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி
-
திருச்சியின் வளர்ச்சியை சரியாக பார்க்கவில்லை : விஜயக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி
14 Sep 2025திருச்சி : திருச்சியின் வளர்ச்சியை விஜய் சரியாக பார்க்கவில்லை என்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகும் : வானிலை முன்கணிப்பில் தகவல்
14 Sep 2025சென்னை : நவம்பர் பிற்பகுதி மற்றும் டிசம்பர் முற்பகுதியில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகக்கூடும் என்றும், புயல் சின்னங்கள் டெல்டா, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள
-
பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்: இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14 Sep 2025சென்னை : இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.