முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செல்பி மோகத்தால் ஏற்பட்ட பயங்கரம்: நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞர் 7 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

செவ்வாய்க்கிழமை, 9 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Ajitpandian 2022-08-09

Source: provided

திண்டுக்கல் : பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் செல்பி மோகத்தால் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞர் 7 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்க்கப்பட்டார்.

பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் கடந்த 3-ந்தேதி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த என்ஜினீயரான அஜித்பாண்டியன் (வயது 28) என்பவர் தவறி விழுந்தார். அப்போது அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதையடுத்து அவரை தேடும் பணியில் தீயணைப்பு படைவீரர்கள் ஈடுபட்டனர். ஆனால் 5 நாட்களாக தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் 6-வது நாளாக என்ஜினீயரை தேடும் பணி நடந்தது. அப்போது ஓடையில் தண்ணீர் அதிக அளவு சென்று கொண்டிருந்தது. இருப்பினும் கயிறு கட்டி, ஓடையில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆற்று கரையோரத்தில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அவர்கள் தேடினர். இருப்பினும் நேற்று முன்தினம் மாலை வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில், நேற்று 7-வது நாளாக என்ஜினீயரை தேடும் பணி நடந்து வந்த நிலையில், தாண்டிகுடி அடுத்து புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு வரக்கூடிய வழியில் மீனாட்சி ஊத்து என்ற இடத்தில் பாறைக்களுக்கு இடையில் அழுகிய நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. உடல் மிகவும் அழுகிய நிலையில் இருப்பதால் உடலை மேல கொண்டு வர தீயணைப்பு படையினர் முயற்சி செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து