முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் ஆர்.என் ரவி தேநீர் விருந்து;முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      தமிழகம்
RN-Ravi 2022-08-15

சுதந்திர தினத்தையொட்டி  கவர்னர் ஆர்.என் ரவி அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளவில்லை.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவி, அரசியல் தலைவர்களுக்கு தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த தேநீர் விருந்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மேலும், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி, மெய்யநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 

பெரம்பலூர் எம்.பி.பாரிவேந்தன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர். திமுக வின் தோழமை கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர். கவர்னரின் தேநீர் விருந்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களான வைத்தியநாதன், மனோஜ் பாண்டியன் ஆகியோருட கலந்துகொண்டார். எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து