முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெட்ரிக் பள்ளிகளுக்கு 9-ம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு

புதன்கிழமை, 5 அக்டோபர் 2022      தமிழகம்
School 2022-08-20

Source: provided

சென்னை : மெட்ரிக் பள்ளிகளுக்கு வரும் 9-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு வரும் 10-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், மெட்ரிக் பள்ளிகளுக்கு வரும் 9-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர் கருப்பசாமி தெரிவித்துள்ளார். 

இன்று பள்ளிகளை திறப்பதா அல்லது விடுமுறையை தொடர்வதா என்று குழப்பம் நிலவியதை தொடர்ந்து மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர் கருப்பசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னதாக,  செப்டம்பர் மாதம் 30-ம் தேதி காலாண்டுத் தேர்வு முடிவடைந்தது.

இதனையடுத்து, அக்டோபர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு 6-ம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து