முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் போட்டியில் பட்டம் வென்ற இந்திய வீரர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2023      விளையாட்டு
Badminton 2023 03 26

Source: provided

பேசல் : சுவிட்சர்லாந்து நாட்டின் பேசல் நகரில் சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இந்திய வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை ஆடவர் இரட்டையர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இதனை தொடர்ந்து நேற்று நடந்த இறுதி போட்டியில் அவர்கள், சீனாவின் டாங் குயியான் மற்றும் ரென் யூ ஜியாங் இணையை எதிர்த்து விளையாடியனர். போட்டி தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்புடன் சென்றது.

பேட்மிண்டன் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்திய இணை, 21-வது இடத்தில் உள்ள சீன இணையை 21-19, 24-22 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது. 2023 சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடரில் சீன இணையின் முதல் தோல்வி இதுவாகும் என்பது கவனிக்கத்தக்கது.

நடப்பு ஆண்டில் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் இருவரும், பட்டத்திற்கான தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து