முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் மீது நடந்த தாக்குதலே உதாரணம் : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 27 மே 2023      தமிழகம்
EPS 2023 03 27

Source: provided

சென்னை : தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டின் உதாரணம் வருமான வரித்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதனிடையே, கரூரில் சோதனை நடத்த சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினர். வருமானவரித்துறையினரின் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த தாக்குதலில் வருமான வரித்துறை பெண் அதிகாரி உள்பட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டின் உதாரணம் என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் செய்துள்ளார்.  

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்து வரும் துறையில் ஒன்றான டாஸ்மாக் நிறுவனத்தில் உள்ள சுமார் 4000-த்திற்கும் மேற்பட்ட பார்களின் லைசென்ஸ்கள் புதுப்பிக்கப்படாமல், சட்டத்திற்குப் புறம்பாக அவரது கரூர் கம்பெனியால் நடத்தப்படுவதாக அனைத்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

மேலும், டாஸ்மாக் கடைகளில் பாட்டில் ஒன்றுக்கு 10/- ரூபாய் வீதம் கூடுதலாக வசூலித்துத் தரவேண்டும் என்று, தாங்கள் கரூர் கம்பெனியை சேர்ந்தவர்களால் வற்புறுத்தப்படுவதாக டாஸ்மாக் ஊழியர்களே குற்றஞ்சாட்டி பேட்டி அளித்துள்ளனர். இதன் மூலம், பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெறுகிறது என்று நாளிதழ்களும், ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டுள்ளன.

முறையாக வருமான வரி கட்டவில்லை என்றும்; வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும் வந்த செய்திகளின் அடிப்படையில் விசாரிக்க முறையாக வந்த மத்திய வருமான வரித்துறை அதிகாரிகளை கரூரில் திமுக குண்டர்கள் அடித்து விரட்டி இருக்கிறார்கள்.

வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டுள்ளன. தாக்குதலுக்குள்ளான வருமான வரித்துறை பெண் அதிகாரி உட்பட 4 பேர், கரூர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பது, நம் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்கு உதாரனமாகும். மாநில அரசு அதிகாரிகளும் திமுக குண்டர்களால் தாக்கப்படுகின்றனர். இப்போது மத்திய அரசு அதிகாரிகளும் தாக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கரூர் காவல் துறை கண்காணிப்பாளர், வருமான வரித்துறையினர் முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டு வந்திருந்தால் தக்க பாதுகாப்பு அளித்திருப்போம் என்று கூறுகிறார். ஒரு அகில இந்திய காவல் பணி அதிகாரி எப்படி இவ்வாறு பொது வெளியில் பேட்டி அளிக்கிறார் என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.

கடந்த இரண்டு நாட்களாக செந்தில்பாலாஜி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வீடுகள், அலுவலகங்கள் என்று பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் எந்த தனியார் ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் சோதனை நடந்தாலும், அதில் எங்களை சம்பந்தப்படுத்தி அறிக்கை விடும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ? தற்போது ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் வீடுகளில் வருமான வரிச் சோதனை நடத்தப்படும்போது இதை கண்டிக்கின்றனர்' என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து