முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியாய விலைக்கடைகளுக்கு உணவு பொருட்கள் வழங்குவதில் தாமதமா? - அமைச்சர் சக்கரபாணி விளக்கம்

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2023      தமிழகம்
Chakkara-Pani 2023-04-27

Source: provided

சென்னை : நியாய விலைக்கடைகளுக்கு  உணவுப் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றன என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 3 மற்றும், 4-ம் தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான முடிச்சூர், முகலிவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, மணலி, திருவொற்றியூர், அம்பத்தூர், ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பல இடங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. மழை விட்டு 5 நாட்கள் ஆகியும், இன்னும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் முழுமையாக வடிந்த பாடில்லை. எனினும், பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் நியாய விலைக் கடைகளுக்கு உணவுப் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றன என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சக்கரபாணி, அண்ணா நகர், திருவான்மியூரில் 2 குடோன்களில் மட்டும் தண்ணீர் புகுந்துள்ளது; 11 நியாய விலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு பாதிக்கப்பட்டுள்ளது. பெரிய பாதிப்பில்லை. நியாய விலைக் கடைகளுக்கு உணவுப் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றன என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து