முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டணமின்றி ஆண்டுக்கு 5 முறை அறுபடை வீடுகளுக்கு சுற்றுலா இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர்

புதன்கிழமை, 10 ஜனவரி 2024      தமிழகம்
Sekar-Babu 2023-04-20

Source: provided

சென்னை:முருகப் பெருமானின்  அறுபடை வீடுகளுக்கு கட்டணமின்றி ஆண்டுக்கு 5 முறை மூத்த குடிமக்களுக்கான ஆன்மீக சுற்று பயணம்  வரும் 28-ம் தேதி தொடங்கவிருக்கிறது. இதற்கான விண்ணப்பத்தினை இன்று முதல் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

அமைச்சர் பி.கே.சேகர் பாபு நேற்று சென்னையில் ஆணையர் அலுவலகத்தில் கோவில்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற 2,646 அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் கொடை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து 10 நபர்களுக்கு ரூ.1,000/-க்கான காசோலைகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ் கடவுள் முருக பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய திருத்தலங்களுக்கு ஒரே முறையாக பக்தர்கள் தரிசனம் செய்திடும் வகையில் ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, முருகப்பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், ஒரே முறையாக சென்று தரிசனம் செய்திட சிரமப்படுகிறார்கள் என்பதனை கருத்தில் கொண்டு, இந்த ஆறு கோவில்களுக்கும் கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 200 நபர்களை ஆண்டிற்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை அழைத்து சென்று தரிசனம் செய்து வைத்திட இந்து சமய அறநிலையத்துறை புதிய முயற்சியை மேற்கொண்டு உள்ளது.

அதன்படி, முதற்கட்ட அறுபடை வீடு ஆன்மிக சுற்றுப்பயணம் வருகிற 28-ம் தேதி அன்று தொடங்க இருக்கின்றது. இதற்கான விண்ணப்பத்தினை இன்று முதல் துறையில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய 200 விண்ணப்பதாரர்கள் முதற்கட்ட பயணத்தில் அழைத்துச் செல்லப்படுவர். ஏனைய தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அடுத்தடுத்த ஆன்மிக பயணங்களில் அழைத்து செல்ல முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்  

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து