முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புத்தகயா குண்டு வெடிப்பு: அதிபர் ராஜபக்சே அதிர்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, ஜூலை. 8 - பீகாரில் உள்ள மகாபோதி கோவிலில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு குறித்து அறிந்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கடும் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். இது குறித்து இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் ஊடக தொடர்பாளர் விஜயந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சர்வதேச அளவில் புகழ்பெற்ற புனித இடத்தில் குண்டு வெடித்தது ராஜபக்சேவுக்கு வேதனை அளிக்கிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் விசாரணை நடத்தி அவருக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

குண்டுவெடிப்பு பற்றி தகவல் கிடைத்தவுடன் ராஜபக்சே மகாபோதி கோவிலின் தலைவரை அணுகி பேசினார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் புத்தகயா மாவட்டத்தில் உள்ள பிரபல புத்த கோவிலான மகாபோதி கோவிலில் நேற்று காலை 9 குண்டுகள் வெடித்ததில் 5 பேர் காயம் அடைந்தனர். இந்த கோவிலுக்கு இலங்கையில் இருந்து ஏராளமானோர் புனித யாத்திரை வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago