எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெங்களூரு : டோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா? இல்லையா? என்பது அவருக்குத்தான் தெரியும் என்று எரிக் சிம்மன்ஸ் கூறியுள்ளார்.
ஓய்வு பெறுவார்...
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பி சாம்பியன் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இந்த தோல்வியின் மூலம் சென்னை அடுத்து சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. முன்னதாக சென்னை அணியின் முன்னாள் கேப்டனாக எம்.எஸ். டோனி இந்த சீசனுடன் ஓய்வு பெறுவார் என்ற கருத்துகள் காணப்பட்டன. அதற்கேற்றவாறே இந்த சீசனுக்கு முன்னதாக சென்னை அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்தார். அத்துடன் முழங்கால் வலியால் அவதிப்படும் அவர் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
யூகிக்க முடியாது...
இந்நிலையில் டோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா? இல்லையா? என்பது அவருக்குத்தான் தெரியும் என்று சென்னை அணியின் துணை பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "அவர் எதிர்காலத்தைப் பற்றி யாராலும் யூகிக்க முடியாது. அவர் என்ன செய்யப் போகிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். பல ஆண்டுகளாக அவர் நன்றாக ஆடி வருகிறார். எனவே நன்றாக விளையாடும் அவர்தான் அந்த முடிவைப் பற்றி எடுப்பார். கிரிக்கெட் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய புரிதலின் அடிப்படையில் அவர் ஒரு நம்ப முடியாத அற்புதமான வீரர்.
அவருக்கு மட்டுமே...
அவரைப் பற்றி நிறைய நினைவுகள் இருக்கின்றன. அவர் எங்களுடைய வீரர்களுக்கு நிறைய தகவல் மற்றும் அறிவை பகிர்ந்து உதவி செய்து வருகிறார். அது டோனியை போல் விளையாடுவதை பற்றி கிடையாது. டோனியை போல் விளையாட்டை புரிந்து கொள்வதைப் பற்றியதாகும். எனவே அவர் அடுத்த சீசனில் விளையாடுவாரா? என்பது அவருக்கு மட்டுமே தெரியும்" என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


