முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி.யில் பா,ஜ போஸ்டர்களில் மோடி படம் புறக்கணிப்பு

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

போபால்,ஜூலை, 24 -  மத்தியபிரதேச மாநிலத்தில் பாரதீய ஜனதா பிரசார போஸ்டர்களில் நரேந்திரமோடி படம் புறக்கணிக்கப்பட்டது.

 குஜராத் முதல்மந்திரி நரேந்திரமோடியை பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளராக முன்னிலைப் படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக அவர் கட்சியின் பிரசார குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை பல்வேறு மாநிலங்களிலும் பாரதீய ஜனதா கட்சியினர் வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் பாரதீய ஜனதாபிரசார போஸ்டர்களில் நரேந்திரமோடி படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் பாரதீய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. சிவராஜ்சிங் சவுகான் முதல்மந்திரியாக இருந்து வருகிறார். அவர் தனது அரசின் சாதனைகளை விளக்கி கட்சி சார்பில் 60 நாட்கள் ரதயாத்திரை பிரசாரத்தை நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இதற்காக பெரியஅளவில் விளம்பரம் செய்து இருந்தார். அதில் வாஜ்பாய்,அத்வானி, ராஜ்நாத்சிங், சுஷ்மாசுவராஜ், அருண்ஜெட்லி, அனந்தகுமார் ஆகியோரது படங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் நரேந்திரமோடி படம் இடம் பெறவில்லை. அனந்தகுமார், அருண்ஜெட்லி போன்றவர்களது படங்கள் இடம் பெற்றநிலையில் நரேந்திரமோடி படம் இடம்பெறாதது தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நரேந்திரமோடி பாரதீய ஜனதா பிரசார குழு தலைவராக நியமிக்கப்பட்டதற்கு அத்வானி எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்தார். பின்னர் சமரசம் ஆனார். முன்னதாக மத்திய பிரதேசம் சென்ற போது சிவராஜ் சவுகானை பாராட்டி சிறப்பாக ஆட்சி செய்வதாகவும், மத்திய பிரதேச மாநிலம் வேகமாக முன்னேறி வருவதாகவும் புகழ்ந்து பேசினார். நரேந்திரமோடிக்கு முக்கியத்துவம் அளிப்பதைவைத்தே அவர் இவ்வாறு சவுகானை உயர்த்தி பேசினார். இது கட்சி தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு உத்தரகாண்ட் மாநிலம் சென்ற நரேந்திரமோடி அங்கு தவித்த தனது மாநில பக்தர்களை மட்டும் மீட்டு அழைத்து வந்தார். மத்திய பிரதேச மாநில பக்தர்களை அவர் கண்டுகொள்ளவில்லை. இதன் காரணமாக நரேந்திரமோடி மீது மத்திய பிரதேச மாநிலத்தில் அதிருப்தி நிலவியது. இதன் வெளிப்பாடு தான் நரேந்திரமோடி படம் இடம்பெறாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago