முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி அருகே அப்பர்பவானி சாலையில் சாரல் மழையில் திடீரென உலா வந்த புலி

புதன்கிழமை, 24 ஜூலை 2024      தமிழகம்
Puli 2023-12-29

Source: provided

ஊட்டி : ஊட்டி அருகே உள்ள  அப்பர்பவானி சாலையில் சாரல் மழையில் திடீரென உலா வந்த புலி. வீடியோ பதிவு செய்தவரை பார்த்து சற்றும் அசராமல் கம்பீரமாக சாலையை கடந்து சென்றது.

ஊட்டி மற்றும் அதைச்சுற்றி பெரும்பாலான கிராமப் பகுதிகளில் சமீப நாட்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக சிறுத்தை, கரடி, காட்டெருமை, புலி போன்ற வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சர்வசாதாரணமாக உலா வருகின்றன.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் மஞ்சூர்,  அப்பர்பவானி போன்ற பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் சமீப காலமாக  தென்பட்டு வருகிறது. இந்நிலையில்  நேற்று  காலை அப்பர்பவானி செல்லும் சாலையில் திடீரென வனப்பகுதியிலிருந்து சாரல் மழையில் நனைந்து  புலி ஒன்று உலா வந்ததுள்ளது.

இதைக் கண்டு அச்சாலை வழியாக சென்ற வாகன ஓட்டி பதற்றத்துடன் வாகனத்தை நிறுத்தி புலியை வீடியோ  பதிவு செய்துள்ளார். அப்போது புலி அசராமல் தன் முன் இருந்த வாகனத்தை கம்பீரமாக முறைத்து பார்த்தது பின்பு சிறிது தூரம் நடந்து சென்று சாலையின் குறுக்கே நின்றது. பின்பு மெதுவாக வனப்பகுதிக்குள்  நடந்து சென்றது.

பொதுவாக மனிதர்கள் மற்றும் வாகனங்களைக் கண்டால் வனவிலங்குகள் ஓடி செல்லும். ஆனால் இந்த புலி எந்த வித அச்சமுமில்லாமல் கம்பீரமாக சாலையில் உலா வந்த காட்சிகள் சமூக வளைதலங்களில் வேகமாக பரவி வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து