முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூரில் ஆவணி தேரோட்டம் கோலாகலம்

திங்கட்கிழமை, 2 செப்டம்பர் 2024      ஆன்மிகம்
Tiruchendur 2024-09-02

Source: provided

திருச்செந்தூர் : திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா பத்தாம் நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

திருச்செந்தூரில் பிரசித்திப் பெற்ற ஆவணித் திருவிழா கடந்த ஆக. 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் காலை, மாலையில் வீதி உலா வந்தனர்.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான கடந்த ஆக. 30ம் தேதி ஏழாம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி சண்முகர் சிகப்பு சாத்தி தங்கச் சப்பரத்திலும், ஆக. 31ம் தேதி எட்டாம் திருவிழா காலை சுவாமி வெள்ளைச் சாத்தி வெள்ளிச் சப்பரத்திலும், பகலில் பச்சை சாத்தி கடைசல் சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்து, நேற்று முன்தினம் காலை திருக்கோயில் வந்தடைந்தார்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு காலை 6.35 மணிக்கு பிள்ளையார் தேர், சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய பெரிய தேர், மற்றும் வள்ளியம்மன் தேர்கள் நான்கு ரதவீதிகள் வழியாக வந்தது.

விழாவில் திருக்கோயில் கண்காணிப்பாளர்கள் அஜித், செந்தில்வேல்முருகன், முத்துமாரி, மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் திருச்செந்தூர் காவல் துணைக்கண்காணிப்பாளர் மு.வசந்தராஜ் தலைமையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் ரா.அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், பா.கணேசன், ந.ராமதாஸ், வி.செந்தில்முருகன், இணை ஆணையர் எஸ்.ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து