முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காந்தி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியபோது கேரள கவர்னரின் துண்டில் பற்றிய தீயால் பரபரப்பு

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2024      இந்தியா
Arif-Khan 2023-12-12

Source: provided

திருவனந்தபுரம் : மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியபோது கேரள கவர்னரின் துண்டில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மகாத்மா காந்தி வந்து சென்ற அகத்தேதரா என்ற இடத்தில் உள்ள 'சபரி' ஆசிரமத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் நேற்று பங்கேற்றார்.  அங்கிருந்த மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது ஆரிப் முகமது கான் கழுத்தில் அணிந்திருந்த துண்டு, மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த விளக்கில் பட்டு தீப்பற்றி எரிந்தது. இதனை அவர் கவனிக்காத நிலையில், அருகில் இருந்தவர்கள் உடனடியாக கவர்னரை எச்சரிக்கை செய்து அவரது கழுத்தில் இருந்த துண்டை அகற்றி தீயை அணைத்தனர்.

இதனால் தீ மேலும் பரவாமல் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் கவர்னருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கவர்னர் கழுத்தில் அணிந்திருந்த துண்டில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து