முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதைப் பொருளுடன் கைது: துணை நடிகை மீனாவுக்கு 15-ம் தேதி வரை காவல்

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024      சினிமா
Meena 2024-11-09

Source: provided

சென்னை : போதைப் பொருளுடன் கைதான துணை நடிகை மீனாவுக்கு வரும் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே ஒரு பெண் மெத்தபெட்டமைன் விற்பதாக அண்ணா சாலை போலீஸாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸார்   தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த இளம் பெண்ணை பிடித்து விசாரித்தனர். இதில், அந்த பெண் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததையடுத்து அவரது பையை சோதித்தனர். பையில் 5 கிராம் மெத்தபெட்டமைன் இருந்தது. இதையடுத்து போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். 

இதில், அந்த இளம்பெண் கோவிலம்பாக்கம் அருகேயுள்ள வெள்ளக்கோயில் கண்ணதாசன் தெருவைச் சோ்ந்த கா. எஸ்தா் (எ) மீனா (28) என்பதும், இலங்கையை பூா்விகமாகக் கொண்டவா் என்பதும் தெரியவந்தது. துணை நடிகை மீனா, தமிழ்த் தொலைக்காட்சிகளில் சின்னத்திரை தொடா்களில் நடித்து  வருவதும், அவருக்கு ராயப்பேட்டையைச் சோ்ந்த ஜேம்ஸ் (27) என்பவா் மெத்தபெட்டமைன் வழங்கியதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

அதேவேளையில், மீனா  மூலம் திரைப்படக் கலைஞா்களுக்கு போதைப் பொருள் விற்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். துணை நடிகை மீனாவுக்கு மெத்தபெட்டமைனை வழங்கியதாகக் கூறப்படும் ஜேம்ஸையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், துணை நடிகை மீனா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற காவலையடுத்து துணை நடிகை மீனா சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து