முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவள்ளுவர் சிலைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மரியாதை: குறள் வழி நடந்து சமத்துவ சமுதாயம் பேணுவோம் என பதிவு

புதன்கிழமை, 15 ஜனவரி 2025      தமிழகம்
CM-1-2025-01-15

சென்னை, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். குறள் வழி நடப்போம், சமத்துவ சமுதாயம் பேணுவோம் என அவர் பதிவிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இரண்டாவது நாள், மாட்டுப் பொங்கல் திருநாளன்று, திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் நேற்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலின் சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோரும் திருவள்ளுவர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

இந்த நிலையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முதல்வர்  மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலகத்தார் அனைவருக்கும் பொதுநெறி வழங்கிய தமிழ்ப் பேரறிவின் அடையாளம் அய்யன் திருவள்ளுவரைப் போற்றுவோம் குறள் வழி நடப்போம் சமத்துவ சமுதாயம் பேணுவோம் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து