எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக மிகவும் சிறப்பான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் பிசிசிஐ-யை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்திய அணித் தேர்வுக்குழு உறுப்பினர்களையும், பிசிசிஐயையும் பாராட்ட விரும்புகிறேன். இந்திய அணிக்காக விளையாடிய வீரர்கள் அணியைத் தேர்வு செய்துள்ளனர். அவர்கள் சரியான வீரர்களை அணிக்குத் தேர்வு செய்துள்ளார்கள்.
ரோகித் சர்மா கேப்டனாக அணியை வழிநடத்த, ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏனெனில், எதிர்காலத்தில் ஷுப்மன் கில் அணியை வழிநடத்த அணியின் துணைக் கேப்டனாக செயல்படுவது அவருக்கு உதவியாக இருக்கும். இதுவே சரியான அணுகுமுறை. வீரர்களின் கடினமான காலத்தில் அவர்களுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும். எதிர்காலத்தில் இந்திய அணிக்காக மிகப் பெரிய வீரராக உருவெடுக்கவுள்ள அபிஷேக் சர்மா, சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெற்றிருக்க வேண்டும் எனக் கூறுவேன். ஏனெனில், இந்த தொடர், அவர் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்வதற்கான மிகப் பெரிய வாய்ப்பாக இருந்திருக்கும் என்றார்.
__________________________________________________________________________________
டெல்லி கேப்டன் அக்சர் படேல்
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் மார்ச் 21-ம் தேதி தொடங்க உள்ளது.10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக ( நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.
இதில் லக்னோ அணியின் முன்னாள் கேப்டனான கே.எல். ராகுலை ரூ.14 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியது. டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்டை லக்னோ ஏலத்தில் எடுத்தது. இதனால் டெல்லி அணியின் புதிய கேப்டனாக கே.எல். ராகுல் நியமிக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் டெல்லி அணியின் புதிய கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்சர் படேல் இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அதனை கருத்தில் கொண்டே டெல்லி அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
__________________________________________________________________________________
கருண் நாயர் குறித்து அகர்கர்
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் மட்டுமின்றி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியிலும் கருண் நாயர் இடம் பெறவில்லை. இந்நிலையில், இந்திய அணியில் கருண் நாயர் இடம் பெறாதது ஏன்..? என்பது குறித்து இந்திய தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, அது (கருண் நாயர் செயல்பாடு) மிகவும் ஸ்பெஷல் செயல்பாடு. ஒருவர் 752 ரன்களை 752 என்ற சராசரியில் அடிப்பது அற்புதமானது.
அது போன்ற செயல்பாடுகளை பற்றி நாங்களும் பேசினோம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், தற்போது இந்திய அணியில் வாய்ப்பைப் பிடிப்பது மிகவும் கடினம். ஏனெனில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வீரர்கள் அனைவருமே 40-க்கும் மேற்பட்ட சராசரியை கொண்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். துரதிஷ்டவசமாக அனைவரையும் உங்களால் அணியில் தேர்ந்தெடுக்க முடியாது, இது 15 பேர் கொண்ட அணி மட்டுமே. அதே சமயம் அது போன்ற செயல்பாடுகள் உங்களுடைய கவனத்தை ஈர்க்கும். இவ்வாறு அவர் கூறினார்.
__________________________________________________________________________________
4-வது சுற்றில் ஜன்னிக் சின்னெர்
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து கொண்ட ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னெர், அமெரிக்காவின் மார்கோஸ் கிரோன் உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சின்னெர் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் மார்கோஸ் கிரோனை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். வரும் 20ம் தேதி நடைபெறும் 4வது சுற்று ஆட்டத்தில் ஜன்னிக் சின்னெர், செர்பியாவின் மியோமிர் கெக்மனோவிக் அல்லது டென்மார்க்கின் ஹோல்கர் ரூனே ஆகிய இருவரில் ஒருவரை எதிர்கொள்வார்.
__________________________________________________________________________________
5-வது ஆண்டாக ஆர்.சி.பி. சாதனை
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மீண்டும் ஒருமுறை சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான ஐபிஎல் அணி என்ற நிலையை தக்கவைத்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதல் இடம் பிடித்த ஐபிஎல் அணி என்ற சாதனையை ஆர்சிபி படைத்துள்ளது. சமூக ஊடக பகுப்பாய்வு சோஷியல் இன்சைடர் மற்றும் எஸ்இஎம் ரஷ் படி ஆர்சிபி அணியின் இன்ஸ்டாகிராம், எக்ஸ்தளம், யூடியூப் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் மொத்த ஈடுபாடு 2024-ம் ஆண்டில் 2 பில்லியனை எட்டியுள்ளது. இது 2-வது இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியை விட 25 சதவீதம் அதிகமாகும்.
ஆர்சிபியின் டிஜிட்டல் இருப்பு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 5 மில்லியன் அதிகரித்து, ஆன்லைனில் வேகமாக வளர்ந்து வரும் ஐபிஎல் அணியாக மாறியுள்ளது. மேலும் இன்ஸ்டாகிராமில் முதல் 5 உலகளாவிய விளையாட்டு அணிகளில் ஆர்சிபி அணி இடம்பிடித்துள்ளது. ரியல் மாட்ரிட் மற்றும் எஃப்சி பார்சிலோனாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ஆர்சிபி உள்ளது. ஆர்சிபி தனது வாட்ஸ்அப் ஒளிபரப்பு சேனலில் 7.5 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் தனது வரம்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளது, இது வாட்ஸ்அப்பில் அதிகம் பின்தொடரும் ஐபிஎல் அணியாக மாறியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
11 Mar 2026சென்னை, தமிழகத்தில் இன்று முதல் 15-ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என வானிலை
-
திருச்சி பஞ்சப்பூரில் மத்திய அரசு சார்பில் விழா; ரூ.5,650 கோடியில் புதிய திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
11 Mar 2026திருச்சி, திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற மத்திய அரசின் விழாவில் சுமார் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.
-
குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி: 54 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 Mar 2026சென்னை, குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்திலை சேர்ந்த 54 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
அடக்கம், மனிதநேயத்தையும் வளர்த்து கொள்ள வேண்டும்: யு.பி.எஸ்.சி. தமிழக வெற்றியாளர்களுக்கு முதல்வர் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
11 Mar 2026சென்னை, உங்கள் பணியில் நாட்டைக் கவனித்தாலும் உங்கள் வீட்டையும் குடும்பத்தையும் அதே அக்கறையுடன் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று யு.பி.எஸ்.சி.
-
தமிழ்நாட்டில் நவீன, வலுவான மின்சார அமைப்பை உருவாக்க அரசு - கலிபோர்னியா பல்கலை., இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
11 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் நவீன, வலுவான மற்றும் நிலைத்தன்மை கொண்ட மின்சார அமைப்பை உருவாக்க தமிழ்நாடு அரசு-கலிபோர்னியா பல்கலைக்கழகம் இடையே முதல்வர் மு.க.
-
ஹார்மூஸ் ஜலசந்தி அருகே ஈரானின் 16 கண்ணிவெடி படகுகளை தாக்கி அழித்தது அமெரிக்கா
11 Mar 2026வாஷிங்டன், ஹார்மூஸ் ஜலசந்தி அருகே ஈரானின் 16 கண்ணிவெடி படகுகளை அமெரிக்க படை அழித்தது.
-
எல்.பி.ஜி. சிலிண்டர் தட்டுப்பாடு: பார்லி.,யில் விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
11 Mar 2026புதுடெல்லி, நாடு முழுவதும் எல்.பி.ஜி.
-
தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக ஆர்.வி.ஆர்லேகா் இன்று பதவியேற்பு
11 Mar 2026சென்னை, தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.வி.ஆர்லேகா் இன்று பதவியேற்கவுள்ளார்.
-
அரசுப்பள்ளியில் உணவு சாப்பிட்டு மயக்கமடைந்த பள்ளி மாணவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
11 Mar 2026கோவை, கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசுப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவ - மாணவியருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்ட மாணவர்களுக்கு உரிய
-
காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: மாவட்ட எஸ்.பி. நேரில் விசாரணை
11 Mar 2026காரைக்குடி, காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது குறித்து சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் விசாரணை நடத்தி வருக
-
சட்டமன்ற தேர்தல் முடியும் வரை நேரில் ஆஜர் ஆக விலக்கு அளிக்க கோரி நீதிமன்றம் செல்கிறார் விஜய்
11 Mar 2026சென்னை, தேர்தல் முடியும் வரை டெல்லியில் சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆக விலக்கு அளிக்க வேண்டும் என விஜய் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.
-
ரூ.100 கோடியில் மின்சார, மின்னணு இணைப்பிகள் புதிய உற்பத்தி ஆலை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஹிரோசே நிறுவனத்துடன் ஒப்பந்தம்
11 Mar 2026சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லியில் ரூ.100 கோடியில், 100 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் அமையவுள்ள மின்சார / மின்னணு இணைப்பிகள் உற்பத்தி
-
போர் சூழல் காரணமாக மேற்காசியாவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை தேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
11 Mar 2026சென்னை, மேற்காசியாவில் தவிக்கும் தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வருவதற்கான சிறப்பு விமானங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என
-
கோடைக்காலத்தில் எரிவாயு தேவை கூடும் என்பதால் மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோகத்தை உயர்த்த வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
11 Mar 2026சென்னை, மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோகத்தைக் கடந்த 6 மாதங்களில் அவர்கள் பயன்படுத்திய அளவில் 65 சதவீதம் என நிர்ணயித்திருப்பதை மறுபரிசீலிக்க கோரி மத்திய பெட்ரோலியத்
-
நவோதயா பள்ளிகளை எதிர்த்து வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல்
11 Mar 2026புதுடெல்லி, தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் நிறுவ எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
-
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது
11 Mar 2026தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் நடைபெறும் 2025–2026 ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு புதன்கிழமை (மார்
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
11 Mar 2026- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி பஞ்சமுக அனுமார் மரஉறியில் ராமர் திருக்கோலமாய் காட்சி.
- ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.
- திருவாரூர் தியாகராஜர் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
11 Mar 2026


