முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் பணய கைதிகளில் மேலும் 3 பேரை விடுதலை செய்தது ஹமாஸ் அமைப்பு

சனிக்கிழமை, 1 பெப்ரவரி 2025      உலகம்
Hamas 2025-02-01

Source: provided

காசா முனை : இஸ்ரேல் பயண கைதிகள் 3 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது.

இஸ்ரேல், காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழு இடையே ஓராண்டுக்கு மேல் நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, போர் ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக ஹமாஸ் தங்கள் பிடியில் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளில் 33 பேரை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. இதற்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளில் 1,904 பேரை விடுதலை செய்ய இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. அதன்படி, தற்போதுவரை ஹமாஸ் ஆயுதக்குழு தங்கள் பிடியில் இருந்த இஸ்ரேலியர்களில் 10 பேரை விடுதலை செய்துள்ளது. அதற்கு ஈடாக பாலஸ்தீனியர்கள் 300க்கும் மேற்பட்டோரை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது. 

இந்நிலையில், ஹமாஸ் ஆயுதக்குழு தங்கள் பிடியில் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 3 பேரை நேற்றுசெய்தனர். அதன்படி, ஆபர் கல்டரோன் (வயது 54), யர்டன் பிபஸ் (வயது 35) மற்றும் கீத் சிஜல் (வயது 65) ஆகிய 3 பேரை ஹமாஸ் ஆயுதக்குழு இன்றே விடுதலை செய்துள்ளது. இதற்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்களில் 183 பேரை இஸ்ரேல் நேற்று விடுதலை செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து