எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை அணியின் மகேந்திர சிங் தோனி ஓய்வுபெறுவார் என்ற எண்ணத்துடன் ரசிகர்கள் மைதானத்தில் குவிந்துவந்த நிலையில், இந்தாண்டும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை - மும்பை விளையாடும் போட்டிக்கான டிக்கெட் அதிகாரப்பூர்வ தளத்தில் இன்னும் தொடங்காத இணையத்தில், பிரபல டிக்கெட் மறுவிற்பனை தளமான வியாகோகோவில் விற்பனை தொடங்கியுள்ளது. கேஎம்கே லோயர் டிக்கெட் ரூ. 1,23,593-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ. 85,473-க்கு விற்பனையாகி வருகிறது. 12 வகையான விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்படும் நிலையில், குறைந்தபட்ச விலையாக ரூ. 17,804 உள்ளது.
மைதானத்தின் கீழ் கேலரிக்கான டிக்கெட்டுகள் கடந்தாண்டைவிட 10 மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சீசனில் டி கேலரியின் டிக்கெட் ரூ. 1,700-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.20,600-க்கு விற்கப்படுகிறது. மேலும், சென்னை அணிகள் விளையாடும் போட்டிகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் மறுவிற்பனை தளத்தில் விற்கப்பட்டு வருகின்றது. ஐபிஎல் டிக்கெட்டுகள் அதிகாரபூர்வ அறிவிப்புக்கு முன்னதாகவே லட்சக்கணக்கான ரூபாயில் விற்பனையாகி வருவதால் சராசரி ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
____________________________________________________________________________________
ஐ.பி.எல்.: டிராவிட்டுக்கு காயம்
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ம் 18-வது சீசன் வருகிற 22-ம் தேதி முதல் மே 25-ம் தேதி வரை நடக்கிறது. இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது. இந்த சீசனுக்கான ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பெங்களூருவில் கிரிக்கெட் விளையாடிய ராகுல் டிராவிட்டுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது காயத்திலிருந்து மீண்டு வரும் அவர் அணியுடன் விரைவில் இணைவார் என்று ராஜஸ்தான் அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.
____________________________________________________________________________________
ஐ.சி.சி. சார்பில் புதிய விளக்கம்
சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக் கிழமை நிறைவு பெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது. இறுதிப் போட்டிக்கு பின் நடைபெற்ற நிறைவு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்த ஒருவர் கூட மேடையில் இடம்பெறவில்லை என்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இறுதிப் போட்டிக்கு பின் நடைபெற்ற நிறைவு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளாமல் போனதற்கு "விதிமுறைகள்" தான் என்று தற்போது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய புகாருக்கு ஐ.சி.சி. தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ பதில் ஏதும் வழங்கப்பட மாட்டாது என்று தகவல் வெளியாகி உள்ளது. "பாக். கிரிக்கெட் வாரிய மான்டரியன்கள் பார்த்தால், ஐ.சி.சி. சி.இ.ஓ. ஜெஃப் அலார்டைஸ் கூட மேடையில் ஏறவில்லை. இதற்கான காரணம் விதிமுறைகள் தான்," என்று ஐ.சி.சி. சார்ந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.
____________________________________________________________________________________
ஐ.சி.சி.க்கு ராபர்ட்ஸ் கேள்வி
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் ஆன்டி ராபர்ட்ஸ் கூறியதாவது:- இந்தியா கேட்கும் அனைத்து விஷயத்திற்கும் ஐசிசி தலையை ஆட்ட கூடாது. சில விஷயங்களுக்கு நோ என்று பதில் சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும். கடந்த டி20 உலக கோப்பையில் கூட இந்தியாவுக்கு சாதகமாக மைதானம் ஏற்கனவே முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. மற்ற நாடுகளுக்கு எல்லாம் எங்கே விளையாடுகிறோம் என தெரியாத சூழலில் இந்தியாவுக்கு மட்டும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது சாம்பியன்ஷிப் டிராபி தொடரிலும் இதே தான் நடந்திருக்கிறது. அது எப்படி ஒரு தொடரில் பங்கேற்கும் அணி எங்கேயும் பயணம் செய்யாமல் ஒரே மைதானத்தில் விளையாட அனுமதி அளிக்க முடியும்.
இந்தியாவிடம் இருந்து அதிக பணம் வருகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக இந்தியா சொல்வதை எல்லாம் மற்ற நாடுகளும் ஐசிசியும் கேட்கக்கூடாது. தற்போது நடைபெறுவது கிரிக்கெட்டே கிடையாது. இது மற்ற அணிகளுக்கு பாதகமாக அமைகிறது. கிரிக்கெட் என்பது இந்தியா மட்டும் விளையாடும் விளையாட்டு கிடையாது. என்னை பொறுத்தவரை ஐசிசி என்பது தற்போது இந்திய கிரிக்கெட் கவுன்சில் என மாறிவிட்டது. நாளை இந்தியா எங்களுக்கு நோபால் வைடு எடுத்து விடுங்கள் என்று கேட்டால் ஐசிசி உடனே நோ பாலையும் ஓயிடையும் ரத்து செய்து விடுவார்கள். என்று ஆண்டி ராபர்ட்ஸ் கூறினார்.
____________________________________________________________________________________
நெய்மர் சாதனை முறியடிப்பு
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்து அசத்தியுள்ளார் ரபீனியா. ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் கடைசி சுற்றுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. அதில் பார்சிலோனா அணி பென்பிகாவை 3-1 என வென்றது. இந்தப் போட்டியில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த ரபீனியா 11, 42ஆவது நிமிஷங்களில் 2 கோல்கள் அடித்தார். இதன்மூலம் தற்போதைய சீசனில் அதிக கோல்கள் அடித்தவர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஒரு சீசனில் அதிக கோல்கள் அடித்த பிரேசில் வீரர்களில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மேலும், பார்சிலோனா அணிக்காக ஒரு சீசனில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2ஆம் இடம் பிடித்துள்ளார்.
மெஸ்ஸி 14 கோல்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் ரொனால்டோ 17 கோல்களுடன் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிக கோல்கள் அடித்த பிரேசில் வீரர்கள். 1. ரபீனியா - 11 (2-24-25), 2. காகா - 10 (2006-07), 3. ரிவால்டோ - 10 (1999-2000), 4. ஜார்டேல் - 10 (1999-2000), 5. ரோபர்டோ பெர்மினோ - 10 (2017-18), 6. நெய்மர் - 10 (2014-15).
____________________________________________________________________________________
எலிஸ் பெர்ரி புதிய சாதனை
3-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி மும்பையில உள்ள பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நடந்த 20-வது மற்றும் கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்தித்தது. இதில் வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிசுற்றுக்கு முன்னேறலாம் என்ற சூழலில் 'டாஸ்' ஜெயித்த மும்பை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. கடைசி 4 ஓவர்களில் மட்டும் 65 ரன்கள் திரட்டினர். எலிஸ் பெர்ரி 49 ரன்களுடன் (38 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார்.
அடுத்து களம் இறங்கிய மும்பை அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 188 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் பெங்களூரு 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் 49 ரன்கள் குவித்ததன் மூலம் ஆர்சிபி அணி வீராங்கனை புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகளின் பட்டியலில் பெங்களூரு வீராங்கனை எலிஸ் பெர்ரி முதலிடத்தை பிடித்தார். அவரது ஒட்டுமொத்த ரன் எண்ணிக்கை 972 ஆக (25 ஆட்டம்) உயர்ந்தது. டெல்லி கேப்டன் மெக்லானிங் 939 ரன்களுடன் (26 ஆட்டம்) 2-வது இடத்தில் இருக்கிறார்.
____________________________________________________________________________________
பட்லர் குறித்து சஞ்சு சாம்சன்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடந்த ஏழு வருடமாக விளையாடியவர் இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன ஜாஸ் பட்லர். இவரை மெகா ஏலத்தில் குஜராத் அணி ஏலம் எடுத்துள்ளது. ஐபிஎல் 2025 சீசன் வருகிற 22-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனான சஞ்சு சாம்சன், ஜாஸ் பட்டர் தனக்கு நெருங்கிய நண்பர்களில் ஒருவர், அணியின் ஒரு வீரராக இல்லை என்ற நிலைக்கு நான் இன்னும் வரவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சஞ்சு சாம்சன் கூறியதாவது:- ஐபிஎல் அணியை வழி நடத்தும் வாய்ப்பை கொடுக்கிறது. விளையாட்டில் உயர்தரத்தை வழங்குகிறது. நெருங்கி நட்பை உருவாக்க அனுமதிக்கிறது. ஜாஸ் பட்லர் என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர். நாங்கள் இருவரும் ஏழு வருடங்கள் இணைந்து விளையாடியுள்ளோம். இந்தக் காலகட்டத்தில், எங்கள் பேட்டிங் பார்ட்னர்ஷிப் காலம் மிக நீண்டதாக இருந்ததால், நாங்கள் ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொண்டோம். எனக்கு பட்லர் மூத்த சகோதரர் மாதிரி. எனக்கு சந்தேகம் வரும்போதெல்லம், அவரிடம் பேசுவேன். நான் 2021-ல் கேப்டனாகும்போது, அவர் என்னுடைய துணைக் கேப்டன். நான் சிறந்த கேப்டனாக உதவி செய்தார். இவ்வாறு சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
திருச்சி பஞ்சப்பூரில் மத்திய அரசு சார்பில் விழா; ரூ.5,650 கோடியில் புதிய திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
11 Mar 2026திருச்சி, திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற மத்திய அரசின் விழாவில் சுமார் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.
-
அடக்கம், மனிதநேயத்தையும் வளர்த்து கொள்ள வேண்டும்: யு.பி.எஸ்.சி. தமிழக வெற்றியாளர்களுக்கு முதல்வர் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
11 Mar 2026சென்னை, உங்கள் பணியில் நாட்டைக் கவனித்தாலும் உங்கள் வீட்டையும் குடும்பத்தையும் அதே அக்கறையுடன் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று யு.பி.எஸ்.சி.
-
போர் சூழல் காரணமாக மேற்காசியாவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை தேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
11 Mar 2026சென்னை, மேற்காசியாவில் தவிக்கும் தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வருவதற்கான சிறப்பு விமானங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என
-
தமிழ்நாட்டில் நவீன, வலுவான மின்சார அமைப்பை உருவாக்க அரசு - கலிபோர்னியா பல்கலை., இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
11 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் நவீன, வலுவான மற்றும் நிலைத்தன்மை கொண்ட மின்சார அமைப்பை உருவாக்க தமிழ்நாடு அரசு-கலிபோர்னியா பல்கலைக்கழகம் இடையே முதல்வர் மு.க.
-
எல்.பி.ஜி. சிலிண்டர் தட்டுப்பாடு: பார்லி.,யில் விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
11 Mar 2026புதுடெல்லி, நாடு முழுவதும் எல்.பி.ஜி.
-
குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி: 54 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 Mar 2026சென்னை, குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்திலை சேர்ந்த 54 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
11 Mar 2026சென்னை, தமிழகத்தில் இன்று முதல் 15-ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என வானிலை
-
தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக ஆர்.வி.ஆர்லேகா் இன்று பதவியேற்பு
11 Mar 2026சென்னை, தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.வி.ஆர்லேகா் இன்று பதவியேற்கவுள்ளார்.
-
கோடைக்காலத்தில் எரிவாயு தேவை கூடும் என்பதால் மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோகத்தை உயர்த்த வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
11 Mar 2026சென்னை, மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோகத்தைக் கடந்த 6 மாதங்களில் அவர்கள் பயன்படுத்திய அளவில் 65 சதவீதம் என நிர்ணயித்திருப்பதை மறுபரிசீலிக்க கோரி மத்திய பெட்ரோலியத்
-
ரூ.100 கோடியில் மின்சார, மின்னணு இணைப்பிகள் புதிய உற்பத்தி ஆலை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஹிரோசே நிறுவனத்துடன் ஒப்பந்தம்
11 Mar 2026சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லியில் ரூ.100 கோடியில், 100 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் அமையவுள்ள மின்சார / மின்னணு இணைப்பிகள் உற்பத்தி
-
காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: மாவட்ட எஸ்.பி. நேரில் விசாரணை
11 Mar 2026காரைக்குடி, காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது குறித்து சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் விசாரணை நடத்தி வருக
-
அரசுப்பள்ளியில் உணவு சாப்பிட்டு மயக்கமடைந்த பள்ளி மாணவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
11 Mar 2026கோவை, கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசுப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவ - மாணவியருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்ட மாணவர்களுக்கு உரிய
-
நவோதயா பள்ளிகளை எதிர்த்து வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல்
11 Mar 2026புதுடெல்லி, தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் நிறுவ எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
-
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது
11 Mar 2026தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் நடைபெறும் 2025–2026 ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு புதன்கிழமை (மார்
-
சட்டமன்ற தேர்தல் முடியும் வரை நேரில் ஆஜர் ஆக விலக்கு அளிக்க கோரி நீதிமன்றம் செல்கிறார் விஜய்
11 Mar 2026சென்னை, தேர்தல் முடியும் வரை டெல்லியில் சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆக விலக்கு அளிக்க வேண்டும் என விஜய் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.
-
ஹார்மூஸ் ஜலசந்தி அருகே ஈரானின் 16 கண்ணிவெடி படகுகளை தாக்கி அழித்தது அமெரிக்கா
11 Mar 2026வாஷிங்டன், ஹார்மூஸ் ஜலசந்தி அருகே ஈரானின் 16 கண்ணிவெடி படகுகளை அமெரிக்க படை அழித்தது.


