முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமான தரையிறங்கும்போது காணாமல் போன சக்கரம் - பாகிஸ்தானில் பரபரப்பு

வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2025      உலகம்
Pak 2023-10-18

Source: provided

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் இருந்து லாகூர் செல்லும் பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்திற்கு சொந்தமான பி.கே.-306 விமானம் நேற்றுமுன்தினம் காலை புறப்பட்டது. அந்த விமானம் லாகூர் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, விமானத்தின் சக்கரங்களில் ஒன்று காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் லாகூர் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் இன்றி விமானம் பத்திரமாக தரையிறங்கியது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப் பட்டனர். இது குறித்து பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "இது போன்ற அசாதாரண சூழல்களை கையாளும் வகையில் விமானம் வடிவமைக்கப்பட்டிருந்ததால், விமானத்திற்கும், பயணிகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை" என்று தெரிவித்தார்.

விமானத்தின் 6 சக்கர அசெம்ப்ளி அமைப்பில் ஒரு சக்கரம் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அந்த சக்கரம் ஏற்கனவே மோசமான நிலையில் இருந்து வந்ததாகவும், கராச்சி விமான நிலையத்தில் இருந்து விமானம் கிளம்பியபோதே அது உடைந்து விழுந்திருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து