எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
2025 - 26-ம் நிதியாண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகளும் இது குறித்து தங்களது கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்வி வசதிக்காக 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம், தொல்லியல் ஆய்வுகளுக்கும், அருங்காட்சியகங்கள் அமைக்கவும் முன்னுரிமை, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் டைடல் பூங்காக்கள், தொழில் பேட்டைகள் தகவல் தொழில்நுட்ப வளாகங்கள், பெண் தொழில் முனைவோர் உருவாக்கும் திட்டம், மூன்றாம் பாலினத்தவர்களை ஊர்க்காவல் படையில் தேர்வு செய்வது போன்றவை பெருமிதம் கொள்ளவைக்கிறது.
தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு வசதி, மெட்ரோ ரயில் திட்டம், விமான நிலைய விரிவாக்கம், அதிக அன்னிய முதலீடு ஈர்க்கப்பட்டதில் நிதிநிலை அறிக்கை பெருமிதம் கொள்கிறது என்று தெரிவித்திருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன்:-
அரசின் துறைகளில் ஒப்பந்தப் பணியாளர்களாக பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை. சொற்பத்தொகை தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் கவனிக்கத் தவறியது வருத்தம். நூறுநாள் வேலைத் திட்டத்திற்கு தொழிலாளர் ஊதியப் பாக்கி உட்பட ரூ.3 ஆயிரத்து 896 கோடி நிதி வழங்க மறுத்து வருவதை கடுமையான குரலில் கண்டித்திருக்க வேண்டும். சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் மின் கட்டணத்தில் சலுகை கோரி வருவதையும், நிலைக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருவதையும் நிதி நிலை அறிக்கை கருத்தில் கொண்டிருக்க வேண்டும். 2025- 26-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை சமூகத்தின் பல தரப்பு மக்களின் உணர்வுகளை பிரதிபலித்துள்ள போதிலும், தொழிலாளர்கள், அடித்தட்டு உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்பு என்று தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை, முதன்மைத் துறைகளுக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தாவது:-
நிதிநிலை அறிக்கை குறித்து அவர் கூறியிருப்பதாவது, எல்லோருக்கும் எல்லாம் என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக் குறித்த பிரசாரம், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு யாருக்கும் எதுவும் இல்லை என்ற எதார்த்தத்துடன் நிறைவடைந்திருக்கிறது. கல்வி, மருத்துவம், வேளாண்மை போன்ற முதன்மைத் துறைகளுக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மாணவர்களுக்கு இலவச கணினி போன்ற சில கவர்ச்சியான அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும் கூட, அவை மக்களை ஏமாற்றும் அறிவிப்புகளாக உள்ளன என்று தெரிவித்துள்ளார்.மேலும், நடப்பாண்டில் வருவாய்ப் பற்றாக்குறை இருக்காது என்றும், ரூ.1000 கோடிக்கும் மேல் வருவாய் உபரி கிடைக்கும் என்றும் தமிழக அரசு கூறி வந்த நிலையில், ரூ.41,634.93 கோடி வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
நிதிப்பற்றாக்குறை ஒரு லட்சம் கோடியைத் தாண்டி விட்ட நிலையில் நிலைமையை சமாளிக்க நடப்பாண்டில் ரூ.1.62 லட்சம் கோடியை தமிழக அரசு கடனாக வாங்க இருக்கிறது. இதனால் 2025-26ஆம் ஆண்டின் முடிவில் தமிழக அரசின் கடன் ரூ. 9 லட்சத்து 29,959 கோடியாக அதிகரிக்கும்.
அதற்கான வட்டியாக மட்டும் ரூ.70,753 கோடி செலுத்த வேண்டியிருக்கும். நடப்பாண்டின் முடிவில் தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.25 லட்சம் கடன் வாங்கப்பட்டிருக்கும். மொத்தத்தில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மக்களுக்கு பயனளிக்காத, கடன்சுமையை மட்டுமே அதிகரிக்கக்கூடிய நிநிநிலை அறிக்கை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கையில், அடுத்த ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தல் நடக்க உள்ளதால், 2026ல் முழு அளவிலான பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது. இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்ய முடியும். வெற்று விளம்பர திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இது தான். வழக்கம்போல் வெற்று அறிவிப்புகள் மட்டுமே பட்ஜெட் உரையில் இடம் பெற்றுள்ளன. தொழிற்பூங்காக்கள், தொழிற் பயிற்சி நிலையங்கள், தொழிற்பேட்டைகள் என பட்ஜெட்டில் அறிவிப்பு மட்டும் தான் உள்ளது. ஆண்டுதோறும் பட்ஜெட்டில் அறிவித்தால் போதுமா? திட்டங்களை செயல்படுத்துவது எப்போது? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். தமிழகம் வளர்ச்சி அடைந்திருப்பது உண்மைதான். ஆனால், இந்த சாதனைக்கு சொந்தகாரர்கள் ஒவ்வொரு தமிழரும் தான். தமிழ்நாடும், தமிழரும் இதற்காக பெருமைப்பட முடியும். ராஜாஜி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலங்களில் உருவாக்கப்பட்ட அடிப்படை கட்டமைப்புகளை தமிழகம் என்றென்றும் மறக்க முடியாது. இதற்கு, இதுவரை தமிழகத்தில் பொறுப்பில் இருந்த அனைத்து அரசுகளின் பங்களிப்பும் உள்ளது என்றம் எல். முருகன் கூறியிருக்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மேலும் 3 சட்ட மசோதாக்களுக்கு தமிழ்நாடு கவர்னர் ரவி ஒப்புதல்
13 Nov 2025சென்னை: தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மேலும் 3 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
-
அப்பாவிகள் கொடூரமாக கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: காஷ்மீர் முதல்வர்
13 Nov 2025ஸ்ரீநகர்: அப்பாவிகள் கொடூரமாக கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என உமர் அப்துல்லா தெரிவித்தார்.
-
இஸ்லாமாபாத் குண்டுவெடிப்பு: முத்தரப்பு டி-20 தொடர் ராவல்பிண்டிக்கு மாற்றம்
13 Nov 2025இஸ்லாமாபாத்: இஸ்லாமாபாத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு தொடருக்கான திடல்கள் மாற்றம் செய்யப்பட்டுள்
-
இன்று புதிய வீரர்களை ஏலம் எடுக்குகிறது சி.எஸ்.கே. அணி தக்கவைக்கும், கழற்றி விடும் வீரர்கள் விவரம்
13 Nov 2025சென்னை: ஐ.பி.எல். ஏலத்தில் புதிய வீரர்களை இன்று ஏலம் எடுக்கவுள்ள சி.எஸ்.கே. அணி தக்கவைக்கும், கழற்றி விடும் வீரர்கள் விவரம் வெளியாகியுள்ளது.
-
ஆணவ படுகொலை விவகாரம்: விசாணை ஆணையத்திற்கு உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசாணை வெளியீடு
13 Nov 2025சென்னை: ஆணவ படுகொலை விவகாரத்தில் அமைக்கப்பட்ட விசாணை ஆணையத்திற்கு உறுப்பினர்களை
நியமித்து தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
டெல்லி கார் வெடிப்பில் தொடர்புடையவர்ளுக்கு தண்டனை நிச்சயம்: மத்திய அமைச்சர் அமித்ஷா
13 Nov 2025புதுடெல்லி: சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க பிரதமர் மோடி உறுதியேற்றுள்ளார் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
ஐ.சி.சி. அக்டோபர் மாத விருது: தென் ஆப்பிரிக்க அணி வீரர் முத்துசாமி, வீராங்கனை லாரா வோல்வார்ட் தேர்வு
13 Nov 2025துபாய்: ஐ.சி.சி. சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
-
இந்தியா - தெ.ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று தொடக்கம்
13 Nov 2025கொல்கத்தா: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில்
இன்று தொடங்குகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-11-2025.
14 Nov 2025 -
குழந்தைகள் தினம்: இ.பி.எஸ். வாழ்த்து
14 Nov 2025சென்னை : குழந்தைகள் தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பீகார் சட்டசபை தேர்தல் வெற்றி: காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு மக்கள் தகுந்த பதிலடி: எடப்பாடி பழனிசாமி
14 Nov 2025சென்னை : காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
மாமல்லபுரம் அருகே பரபரப்பு: கீழே விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம்
14 Nov 2025செங்கல்பட்டு : மாமல்லபுரம் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: காஷ்மீர் மருத்துவர் முசாபரை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடும் போலீசார்
14 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வரும் நிலையில் காஷ்மீர் மருத்துவர் முசாபரை பிடிக்க இன்டர்போல் உதவியை போலீசார் நா
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் த.வெ.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்
14 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து த.வெ.க. சார்பில் 16-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.
-
தி.மு.க.வில் இணைந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயனுக்கு கட்சிப்பதவி
14 Nov 2025சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த மைத்ரேயனுக்கு தி.மு.க. கல்வியாளர் அணி துணைத் தலைவராக கட்சிப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
-
சென்னை அணியில் இணையும் லிவிங்ஸ்டன் - தேஷ்பாண்டே..!
14 Nov 2025சென்னை: ஆர்.சி.பி.-ல் இருந்து லியாம் லிவிங்ஸ்டனும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து துஷார் தேஷ்பாண்டேவும் சி.எஸ்.கே.
-
மியான்மர் கலவரப்படையில் சேர்க்கப்பட்ட 35 தமிழர்கள் மீட்பு
14 Nov 2025சென்னை: மியான்மர் கலவரப் படையில் சேர்க்கப்பட்ட 35 தமிழர்கள் மீட்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் 4 ஏஜெண்டுகளை போலீசார் கைது செய்தனர்.
-
கொல்கத்தா முதல் டெஸ்ட்: பும்ரா வேகத்தில் வீழ்ந்த தென் ஆப்பிரிக்கா அணி
14 Nov 2025கொல்கத்தா: கொல்கத்தா முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா வேகத்தில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 159 ரன்களுக்கு சுருண்டது.
-
ஆசிய வில்வித்தை போட்டி: இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கம்
14 Nov 2025டாக்கா: வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் 24-வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.
-
பீகாரின் ஒரே முதல்வர் நிதிஷ்குமார் தான் : ஆளுங்கட்சியின் பதிவு உடனடி நீக்கம்
14 Nov 2025டெல்லி: பீகாரில் நிதிஷ்குமார் தான் முதல்வர் என்று ஒருங்கிணைந்த ஜனதா தளம் சமூக ஊடகத்தில் பதிவிட்டதுடன், அதனை உடனடியாக நீக்கியும் விட்டதாகக் கூறப்படுகிறது.
-
டெல்லி குண்டுவெடிப்புக்கும் மும்பை தாக்குதலுக்கும் நெருங்கிய தொடர்பு..!
14 Nov 2025டெல்லி: டெல்லி குண்டுவெடிப்பின்போது கைப்பற்றப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள்தான், மும்பையிலும் 5 குண்டுவெடிப்பு தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியு
-
பீகார் மாநிலம் சந்தேஷ் தொகுதியில் 27 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிதீஷ் குமார் கட்சி வேட்பாளர்
14 Nov 2025டெல்லி: பீகார் மாநிலம் சந்தேஷ் தொகுதியில் ஐக்கிய ஜனதா தளக் கட்சி வேட்பாளர் 27 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
-
தென்கொரிய முன்னாள் பிரதமர் கைது
14 Nov 2025சியோல்: தென்கொரிய முன்னாள் பிரதமரை போலீசார் கைது செய்தனர்.
-
மஹுவா சட்டசபை தொகுதியில் லல்லுவின் மூத்த மகன் தோல்வி
14 Nov 2025டெல்லி: மஹுவா தொகுதியில் தொகுதியில் லல்லு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் தோல்வியடைந்துள்ளார்.
-
ஐ.பி.எல். லக்னோ அணியில் ஷமி..?
14 Nov 2025லக்னோ: இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியை டிரேடிங் முறையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


