முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இப்படி ஓட்டுகிறீர்களே...தெர்மாகோல் குறித்த செல்லூர் ராஜூ பதிலால் சட்டசபையில் சிரிப்பலை

செவ்வாய்க்கிழமை, 18 மார்ச் 2025      தமிழகம்
sellur-raj 2023 06 19

Source: provided

சென்னை: அமைச்சர் ராஜாவின் தெர்மாகோல் பேச்சுக்கு செல்லூர் ராஜூ அளித்த பதிலால் சட்டசபையில் சிரிப்பலை ஏற்பட்டது.

தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் செல்லூர் ராஜூ, தி.மு.க. ஆட்சி முடிவதற்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் எப்படி ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, " தமிழக முதல்வர் ஆட்சியில் கோவை விமான நிலைய விரிவாக்கம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் கோவைக்கு  எந்த ஒரு திட்டத்தையும் முடிக்கவில்லை. தி.மு.க. ஆட்சியில்  2,000 கோடி ஒதுக்கப்பட்டு அங்கே நிலம் எடுக்கப்பட்டு கோவை விமான நிலைய நிர்வாக பணிக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, "விமான நிலையம் கட்டுவது ஜீபூம்பா வேலையா. பட்ஜெட் அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு உரிய காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என்று அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "தூத்துக்குடி மற்றும் மதுரை விமான நிலையபணிகள் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மேற்கொள்ளபட்டவை" என்று அவர் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா,  தண்ணீரில் தெர்மாகோல் விடுவது ஈசி, விமான நிலையம் அமைப்பது அப்படியல்ல, நிலம் கையகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து, மத்திய அரசின் அனுமதி பெற்று ஓசூரில் விரைவில் விமான நிலையம் அமைக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர ராஜூ, "தெர்மாகோல் தெர்மாகோல்னு சொல்றீங்க... அதிகாரி சொல்லி தானே போனோம். இப்படி ஓட்டுகிறீர்களே... சரி பரவாயில்லை, ராஜா வாழ்க.." என்று கலகலப்பாக பேசினார். இதனால் சட்டசபையில் சிரிப்பலை ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து