முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் பந்தில் உமிழ்நீரைப் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி பி.சி.சி.ஐ. நடவடிக்கை

வியாழக்கிழமை, 20 மார்ச் 2025      விளையாட்டு
20-Ram-51

Source: provided

மும்பை:  ஐ.பி.எல்.  தொடருக்கான கிரிக்கெட் பந்தில் உமிழ்நீரைப் பயன்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதியளித்துள்ளது. 

ஐ.பி.எல். தொடர்...

2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல்.  தொடரின் முதல் போட்டி வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கவிருக்கிறது. முதல் போட்டியில் கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதவிருக்கின்றன. கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2022 ஆம் ஆண்டு கிரிக்கெட் பந்தை வழவழப்பாக்குவதற்காக உமிழ்நீர் பயன்படுத்துவதை நிரந்தரமாக தடைசெய்வதாக சர்வதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. இதற்கு முதலில் எதிர்ப்புகள் எழுந்தாலும் பின்னர் நடைமுறையாக்கப்பட்டது.

ஸ்விங் செய்ய கடினம்...

சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்கு கடினமாக உள்ளதாகவும், அதனால், மீண்டு இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். அவருக்கு டிம் சௌதியும் ஆதரவு தெரிவித்திருந்தார்.

தடையை நீக்க முடிவு...

இந்த நிலையில், நேற்று மும்பையில் கேப்டன்களுடன் நடந்த கூட்டத்தில் இந்த தடையை நீக்க பி.சி.சி.ஐ. முடிவுசெய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல்.  போட்டி ஐசிசிக்கு தொடர்பில்லாதது என்பதால் இந்த முடிவுக்கு அனைத்து கேப்டன்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னதாக, முதல் முறை உமிழ்நீர் பயன்படுத்தினால், கேப்டனுக்கு எச்சரிக்கையும், இரண்டாவது முறை பயன்படுத்தினால் 2-வது மற்றும் இறுதி எச்சரிக்கையும், மூன்றாவது முறை பயன்படுத்தினால் வீரருக்கு 10 லட்சம் அல்லது போட்டிக் கட்டணத்தில் 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும் என்ற விதி இருந்தது. இது தற்போது நீக்கப்பட்டுள்ளதால் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து