முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மம்தா பானர்ஜியின் இங்கிலாந்து பயணம் மீண்டும் ஒத்திவைப்பு

சனிக்கிழமை, 22 மார்ச் 2025      இந்தியா
Mamta 2024-12-07

Source: provided

கொல்கத்தா : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் இங்கிலாந்து பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, முதல்வர் மம்தா மற்றும் அவரது குழுவினரும் நேற்று காலை 9.10 மணிக்கு கொல்கத்தாவிலிருந்து புறப்பட்டு முதலில் துபாய் செல்லவிருந்தனர். மீண்டும் அதே துபாயிலிருந்து இரவு 8 மணிக்கு லண்டன் செல்லவிருந்தனர். வெள்ளியன்று பிற்பகல் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக முதல்வரின் பயணம் இரண்டு நாள்களுக்கு ஒத்திவைக்கப்படலாம் என்ற மாநில செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், அங்கு நிலைமை சீரடைந்ததையடுத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா நேற்று மாலை இங்கிலாந்து சென்றார். மார்ச் 24 அன்று லண்டன் செல்லும் மம்தா இந்தியத் தூதரகம் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். அதன் பிறகு மார்ச் 25 அன்று தொழிலதிபர்கள், வணிகர்களைச் சந்திக்க உள்ளார். மார்ச் 26ல் வணிகம் கூட்டத்தில் பங்கேற்கிறார். மார்ச் 27ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரியில் உரையாற்றுகிறார். இறுதியாக, மார்ச் 28ல் அவர் லண்டனிலிருந்து கொல்கத்தாவுக்குப் புறப்படுகிறார்.

முன்னதாக, 2015இல் மம்தா பானர்ஜி இங்கிலாந்து சென்றார். அப்போதைய மாநில நிதியமைச்சர் அமித் மித்ரா உள்பட அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் பலர் அவருடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து