முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் விடுமுறை எதிரொலி: சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு

வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2025      தமிழகம்
Train 2023-04-06

Source: provided

சென்னை: தொடர் விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.

தாம்பரம் - போத்தனூர் செல்லும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06185) வருகிற ஏப்ரம் மாதம் 11, 18, 25, மற்றும் மே 2, 2025 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து (வெள்ளிக்கிழமை) மாலை 5.05 மணியில் புறப்படும். மறுமார்க்கத்தில் போத்தனூர் - தாம்பரம் செல்லும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06186) வருகிற ஏப்ரல் மாதத்தில் 13, 20, 27, மற்றும் மே 4, 2025 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரெயில் போத்தனூரில் (ஞாயிற்றுக்கிழமை) இருந்து 11.55 மணியளவில் புறப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. ரெயில் பெட்டி அமைப்பு: 1- ஏசி இரண்டு அடுக்கு பெட்டி, 3- ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், 12-ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 2- பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2- இரண்டாம் வகுப்பு பெட்டிகள் உள்ளன.

சென்னை- கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06113) வருகிற ஏப்ரம் மாதம் 12, மற்றும் 19, 2025 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரெயில் சென்னையில் இருந்து (சனிக்கிழமை) இரவு 11.20 மணியில் புறப்படும். மறுமார்க்கத்தில் கொல்லம் - சென்னை செல்லும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06114) வருகிற ஏப்ரல் மாதத்தில் 13 மற்றும் 20, 2025 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரெயில் கொல்லத்தில் (ஞாயிற்றுக்கிழமை) இருந்து 11.55 மணியளவில் புறப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. ரெயில் பெட்டி அமைப்பு: 12- ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 6 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், மற்றும் 2- இரண்டாம் வகுப்பு பெட்டிகள் உள்ளன.

சென்னை - போத்தனூர் செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06027) வருகிற ஏப்ரம் மாதம் 11ம் தேதியில் இயக்கப்படும். இந்த ரெயில் சென்னையில் இருந்து (வெள்ளிக்கிழமை) இரவு 11.50 மணியில் புறப்படும். மறுமார்க்கத்தில் போத்தனூர் - சென்னை செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06028) வருகிற ஏப்ரல் மாதம் 14ம் தேதி இயக்கப்படும். இந்த ரெயில் போத்தனூரில் (திங்கட்கிழமை) இருந்து இரவு 11.30 மணியளவில் புறப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. ரெயில் பெட்டி அமைப்பு: 11- ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், 7-ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 2- பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2- லக்கேஜ் கம் பிரேக் வேன்கள் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து