முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிமைதானங்களில் 6 தொடர் வெற்றி: ஆர்.சி.பி. அணி சாதனை

திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2025      விளையாட்டு
RCB 2024-03-20

Source: provided

புதுடெல்லி : ஒரு ஐ.பி.எல். சீசனில் வெளிமைதானங்களில் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற சாதனையை ஆர்.சி.பி  படைத்துள்ளது.

பெங்களூரு வெற்றி...

ஐ.பி.எல். தொடரில் புதுடெல்லியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 162 ரன் மட்டுமே எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ராகுல் 41 ரன் எடுத்தார். தொடர்ந்து 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு 18.3 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 165 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெங்களூரு தரப்பில் குருனால் பாண்ட்யா 73 ரன் எடுத்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது குருனால் பாண்ட்யாவுக்கு வழங்கப்பட்டது.

வரலாற்று சாதனை...  

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் முதல் அணியாக வரலாற்று சாதனை ஒன்றை ஆர்.சி.பி. படைத்துள்ளது. அதாவது, ஒரு ஐ.பி.எல். சீசனில் வெளிமைதானங்களில் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற சாதனையை ஆர்.சி.பி (6 வெற்றி) படைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து