முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம் : பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவிப்பு

புதன்கிழமை, 30 ஏப்ரல் 2025      தமிழகம்
Pramalatha 2023-07-24

Source: provided

சென்னை : தே.மு.தி.க. இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிகையில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், இளைஞர் அணி செயலாளராக வி.விஜய பிரபாகர், நேற்று (ஏப்.30) முதல் நியமிக்கப்படுகிறார். அவருக்கு கழக நிர்வாகிகள், மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து தே.மு.தி.க. திராவிடகழகம் வளர்ச்சி பெற பாடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, ஜனவரி 9-ல் கடலூரில் தே.மு.தி.க. மாநாடு நடைபெறும் என்றார். மேலும், கூட்டணி குறித்து தேர்ந்தல் நெருங்கும்போது முடிவெடுக்கப்படும் என்று கூறினார். முன்னதாக, தே.மு.தி.க. - தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்று தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, வெள்ளிச்சந்தையில் நடைபெற்றது. இதில், தலைமைக் கழக நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்து பதவி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தொடர்கிறார். வி. இளங்கோவன் அவைத் தலைவராகவும், எல்.கே.சுதீஷ் பொருளாளராகவும், ப.பார்த்தசாரதி தலைமை நிலையச் செயலாளராகவும், அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் கொள்கை பரப்புச் செயலாளராகவும், எம்.ஆர்.பன்னீர்செல்வம், சந்திரன், செந்தில்குமார் ஆகியோர் துணைச் செயலாளர்களாகவும் அறிவிக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து