முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி அணி தோல்வி: சுனில்நரைனுக்கு கொல்கத்தா கேப்டன் ரஹானே புகழாரம்

புதன்கிழமை, 30 ஏப்ரல் 2025      விளையாட்டு
Kolkata 2025-02-24

Source: provided

புதுடெல்லி : ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. 

205 ரன்கள் இலக்கு...

இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 204 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 44 ரன் எடுத்தார். டெல்லி தரப்பில் சில போட்டிகளாக விக்கெட் எடுக்க திணறிய ஸ்டார்க் 3 விக்கெட் எடுத்து அசத்தினார். தொடர்ந்து 205 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக டு பிளெஸ்சிஸ் 62 ரன் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் சுனில் நரேன் 3 விக்கெட் வீழ்த்தினார். 

நரேன் வீசிய ஓவர்கள்... 

இந்நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் கொல்கத்தா கேப்டன் ரஹானே அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த போட்டியின் 13-வது ஓவரில்தான் போட்டி எங்கள் வசம் திரும்பியது. சுனில் நரேன் வீசிய ஓவர்கள் அவர் எடுத்த விக்கெட்டுகள் தான் எங்களை ஆட்டத்திற்குள் கொண்டு வந்தது. 205 ரன்கள் என்கிற இலக்கு இந்த மைதானத்தில் எட்டக்கூடிய ஒன்றுதான். முதல் பாதியில் நாங்கள் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம்.

சாம்பியன் பவுலராக... 

ஆனால், இரண்டாவது பாதியில் எங்களுடைய பந்து வீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதாலே வெற்றி பெற்றோம். அதிலும் குறிப்பாக சுனில் நரேன் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தார். அவருடைய மிகச்சிறந்த செயல்பாடு எங்கள் அனைவருக்கும் நம்பிக்கையை அளித்தது. கடந்த பல ஆண்டுகளாகவே எங்களது அணியின் சாம்பியன் பவுலராக அவர் இருந்து வருகிறார். அவரும் வருண் சக்ரவர்த்தியும் எங்கள் அணியில் இருப்பது மிகப்பெரிய பலம். எங்கள் அணி வீரர்கள் மிகக் கடுமையாக உழைக்கின்றனர். ஒரு அணியாக நிச்சயம் நாங்கள் மீண்டும் மிக சிறப்பான செயல்பாட்டை தொடர்ந்து வெளிப்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார். 

மிக நெருக்கமாக.... 

இந்த நிலையில் தோல்வி தொடர்பாக பேசிய டெல்லி கேப்டன் அக்சர் படேல் கூறியதாவது, நாங்கள் 15-20 ரன்கள் அதிகமாக விட்டுக்கொடுத்தோம். சில விக்கெட்டுகளையும் எளிதான முறையில் இழந்தோம். பவர்பிளேவுக்குப் பிறகு அவர்களை எப்படி கட்டுப்படுத்தினோம் என்பதுதான் நேர்மறையானது, சில பேட்டர்கள் தோல்வியடைந்தாலும், நாங்கள் 2-3 பேட்ஸ்மேன்கள் பங்களித்து அதை மிக நெருக்கமாக கொண்டு சென்றோம். விப்ராஜ் பேட்டிங் செய்தபோது நம்பிக்கை இருந்தது, டைவ் செய்ததால் எனக்கு காயம் ஏற்பட்டது. ஆனால் நல்ல விஷயம் அடுத்த போட்டிக்கு 3-4 நாட்கள் இடைவெளி உள்ளது, நான் குணமடைய முடியும் என்று நம்புகிறேன்.என தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து