முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோனி யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை: கில்கிறிஸ்ட் சுளீர்

வியாழக்கிழமை, 1 மே 2025      விளையாட்டு
Dhoni 2023 04 29

Source: provided

சென்னை: சி.எஸ்.கே. கேப்டன் தோனி தன்னை யாருக்கும் நிரூபிக்க வேண்டியதில்லை என முன்னாள் ஆஸி. வீரர் ஆடம் கில்கிறிஸ்ட்  கூறியுள்ளார்.

தோல்விப் பயணம்... 

 தோனி கடைசியாக 2023இல் கேப்டனாக இருக்கும்போது சி.எஸ்.கே. அணி தனது 5-ஆவது கோப்பையை வென்றது. ருதுராஜ் தலைமையில் 2024-இல் சி.எஸ்.கே. அணி மோசமாக விளையாடியது. இந்த சீசனில் ருதுராஜ் காயம் காரணமாக விலகவே தோனி மீண்டும் கேப்டனானார். தோனி கேப்டனாகியும் சி.எஸ்.கே.வின் தோல்விப் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

அவசியம் இல்லை...

இந்நிலையில் இது குறித்து முன்னாள் ஆஸி. விக்கெட் கீப்பரும் அதிரடி பேட்டருமான கில் கிறிஸ்ட் கூறியதாவது: கிரிக்கெட்டில் எம்.எஸ்.தோனி யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை. அவருக்கு என்னச் செய்ய வேண்டும் எனத் தெரியும். ஆனால், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அடுத்தாண்டு ஐ.பி.எல். சீசனில் அவர் விளையாடக் கூடாது. நான் உங்களை நேசிக்கிறேன் எம்.எஸ்.தோனி. நீங்கள் ஒரு சாம்பியன், அடையாள சின்னம் எனக் கூறினார்.

எனக்குத் தெரியாது...

பேட்டர்கள் சொதப்ப அணியில் பல மாற்றங்களை தோனி கொண்டு வந்துள்ளார். தற்போதுதான், ஓரளவுக்கு சி.எஸ்.கே. அணியில் பிளேயிங் லெவனை கண்டறிந்துள்ளார்கள். டாஸின்போது தோனி நான் அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்றே எனக்குத் தெரியாது, இதில் அடுத்த சீசனில் எப்படி? என சிரித்துக்கொண்டே பேசியதும் கவனிக்கத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து