முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உளுந்து, பச்சைப்பயறு குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு

வியாழக்கிழமை, 1 மே 2025      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, விவசாயிகளிடமிருந்து உளுந்து, பச்சைப்பயறு ஆகியவை குறைந்தபட்ச ஆதரவு விலையில் தமிழக அரசால் நேரடியாக கொள்முதல் செய்யப்படும் என தமிழக அரசு  அறிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அறுவடை காலங்களில் ஏற்படும் விலை வீழ்ச்சியினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருக்கவும், அவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து உளுந்து, பச்சைப்பயறு ஆகியவை குறைந்தபட்ச ஆதரவு விலையில் தமிழக அரசால் நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மாநில இணைப்பு முகமையாகவும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் பிரதான கொள்முதல் நிலையங்களாகவும், நாபெட், என்.சி.சி.எப். நிறுவனங்கள் கொள்முதல் முகமைகளாகவும் செயல்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், கொள்முதல் நிலையங்களை அணுகி சிட்டா, அடங்கல், ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண், வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யும்போது பெறப்படும் கடவு சொல்லை பகிர்ந்து உளுந்து, பச்சைப்பயிறு ஆகியவற்றை விற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்ட விளைபொருட்கள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்ட 3 நாட்களுக்குள் அவர்களது வங்கி கணக்கில் பணம் நேரடியாக வரவு வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து