முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிகவும் முதிர்ச்சியடைந்த வீரராக மாறிவிட்டார்: ஷ்ரேயாஸ் ஐயருக்கு பாண்டிங் பாராட்டு

வியாழக்கிழமை, 1 மே 2025      விளையாட்டு
shreyas

Source: provided

சென்னை: ஷ்ரேயாஸ் ஐயர் மிகவும் முதிர்ச்சியடைந்த வீரராக மாறிவிட்டதாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.

பஞ்சாப் வெற்றி...

ஐ.பி.எல். தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற  போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சி.எஸ்.கே.வை வீழ்த்தியது.

ரிக்கி பாண்டிங் பாராட்டு...

சி.எஸ்.கே.வுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் மிகவும் முதிர்ச்சியான வீரராக மாறிவிட்டதாகவும், ஆட்டத்தின் சூழல்களை நன்றாக புரிந்துகொள்வதாகவும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

முதிர்ச்சியடைந்த வீரராக... 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷ்ரேயாஸ் ஐயரின் நம்பிக்கை முன்பை விட மிகவும் அதிகரித்துள்ளது. அவரது அனுபவமும் அதிகரித்துள்ளது. தற்போது அவர் மிகவும் முதிர்ச்சியடைந்த வீரராக மாறியுள்ளார். இதற்கு முன்பு ஆட்டத்தின் சூழல்களை புரிந்துகொண்டதைக் காட்டிலும் தற்போது அவர் மிகவும் நன்றாக ஆட்டத்தின் சூழ்நிலைகளை புரிந்து கொள்கிறார். கடந்த ஆண்டு அவர் கேப்டனாக ஐ.பி.எல். தொடரில் சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தார். அந்த அனுபவம் அவருக்கு உதவியாக இருக்கும் என்றார்.

இரண்டாவது இடத்தில்... 

நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் கிங்ஸ் 6 போட்டிகளில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து