முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்த மைதானத்திலும் சேஸிங் செய்வது பிடிக்கும்: ஷ்ரேயாஸ்

வியாழக்கிழமை, 1 மே 2025      விளையாட்டு
shreyas

Source: provided

சென்னை: பஞ்சாப் அணியின் கேப்டனும் ஆட்ட நாயகன் விருது வென்றவருமான ஷ்ரேயாஸ் ஐயர் எந்தத் திடலிலும் சேஸிங் செய்வது பிடிக்கும் எனக் கூறியுள்ளார்.

த்ரில் வெற்றி... 

சென்னை சேப்பாக்கில் நடைபெற்ற போட்டியில் 19.4ஆவது ஓவரில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த சிஎஸ்கே 190க்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய பஞ்சாப் அணியில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். இறுதியில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்ட நாயகன் விருதும் பெற்றார். இது குறித்து போட்டிக்குப் பிறகு அவர் கூறியதாவது:

சேஸிங் பிடிக்கும்...

எந்தத் திடலிலும் எனக்கு சேஸிங் செய்வதென்றால் பிடிக்கும். மிகப்பெரிய ரன்கள் இலக்காக இருக்கும்போது எனக்கு வெற்றியடைய வேண்டுமென்ற எண்ணம் கூடுதலாக இருக்கிறது. அணிக்காக பொறுப்பேற்பது பிடிக்கும். நான் ஒரு புறம் பொறுமையாக ஆடும்போது மறுபுறத்தில் மற்றவர்கள் அதிரடியாக விளையாடலாம். வெளியூர்களில் மட்டுமே நன்றாக விளையாடுகிறேன் என்ற விஷயத்தில் என்ன சொல்லுவது? நான் அதில் சாபம் விட விரும்பவில்லை. நிகழ்காலத்தில் இருந்து பந்திக்கு ஏற்றபடி விளையாட வேண்டும்.

தன்னம்பிக்கை ...

நான் எங்கு விளையாடுகிறேன் என்பது முக்கியமில்லை. என்னுடைய பாணியில் விளையாடுகிறேன். சில நேரங்களில் அது வேலை செய்கிறது, சில நேரங்களில் செய்வதில்லை. வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நான் அதிகமாக பயிற்சி எடுத்தேன். அது எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. குறிப்பாக புதிய பந்தில் பயிற்சி எடுத்ததால் எனக்கு மிகுந்த தன்னம்பிக்கை கிடைத்தது. இதைதான் நான் மிகவும் கடினமான பயிற்சி செய்து பெற்றேன். பீல்டிங்கில் செல்லும்போது நான் எப்போதும் எனது குணாதியத்தை உயர்வாக வைத்திருக்க விரும்புகிறேன். சிறிய சிறிய கட்டங்களை நிரப்பினாலே போதுமானதென நினைக்கிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து