முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்

திங்கட்கிழமை, 5 மே 2025      சினிமா
Kaundamani 2024-05-14

சென்னை, நடிகர் கவுண்டமணியின் மனைவி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி நேற்று (மே.5) காலை காலமானார். அவருக்கு வயது 67. தமிழ்த் திரையுலகில் காமெடி நடிகராகத் தொடங்கி, குணச்சித்திர கதாபாத்திரங்கள், கதாநாயகன் எனப் பல்வேறு பரிமாணங்களில் நடித்து மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்றிருப்பவர் நடிகர் கவுண்டமணி. இவர் சாந்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு செல்வி, சுமித்ரா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

கவுண்டமணியின் மனைவி சாந்தி கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவால் அவதியுற்று வந்தததாகத் தெரிகிறது. இந்நிலையில், சாந்தி நேற்று காலை 10.30 மணி அளவில் உயிரிழந்தார். அவரது உடல் தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணியின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைத்துறையினர் பலரும் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, கவுண்டமணிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இன்று காலை 11.30 மணியளவில், சென்னை பெசன்ட் நகரிலுள்ள மின் மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும் எனத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து