முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியது மத்திய அரசு : எல்லையோரங்களில் பலத்தை அதிகரிக்க உத்தரவு

வெள்ளிக்கிழமை, 9 மே 2025      இந்தியா
Central-government 2021 12-

புதுடெல்லி, எல்லையில் உச்ச கட்ட போர்ப்பதற்றம் நிலவும் நிலையில், ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எல்லையோரங்களில் பலத்தை அதிகரிக்கவும் மத்திய அரசு ரானுவ தளபதிக்கு அறிவுறுத்தியுள்ளது. 

தற்போது அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, ராணுவத்தில் நிர்வாக ரீதியான மாறுதல்களை மேற்கொள்ளலாம். நாட்டின் பிற பகுதிகளில் உள்ள ராணுவ வீரர்களை எல்லைப்பகுதிக்கு அழைத்துக்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 1948 விதியின் கீழ் 3 ஆண்டுகளுக்கு இந்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு எல்லையை பாகிஸ்தான் பகிர்ந்து கொள்கிறது. ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.   எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை  குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்து வருகிறது. பாகிஸ்தானின் இந்த தாக்குதல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்துவருகிறது. இதனால், எல்லையோர மாநிலங்களில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து