முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில்? - பி.சி.சி.ஐ. தீவிர ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 9 மே 2025      விளையாட்டு
BCCI 2023 06 13

Source: provided

மும்பை : இந்திய டெஸ்ட் அணியின்  கேப்டன் ஆக சுப்மன் கில்லுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவிகின்றன.

அணியை வழிநடத்த... 

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில் புதிய டெஸ்ட் கேப்டனைத் தேர்ந்தெடுப்பதற்கான பொறுப்பு பி.சி.சி.ஐ. தலையில் விழுந்துள்ளது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அடுத்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் மட்டுமல்லாமல் நீண்ட காலத்திற்கு அணியை வழிநடத்தக்கூடிய கேப்டனை தேடி வருகிறது. அந்த வகையில் சுப்மன் கில் அடுத்த டெஸ்ட் கேப்டன் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவிகின்றன. பும்ரா அடிக்கடி காயம் அடைவதால், அவரை தேர்ந்தெடுக்க பி.சி.சி.ஐ. தயக்கம் காட்டுகிறது.

சுப்மன் கில்... 

 இதற்கிடையே நடப்பு ஐ.பி.எல். தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் விளையாடியுள்ளார். எனவே ஜூன் 20 ஆம் தேதி ஹெடிங்லியில் தொடங்கும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முதல் அவரை கேப்டனாக்க பி.சி.சி.ஐ. முனைப்பு காட்டி வருவதாக தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து