முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னையர் தினத்தை முன்னிட்டு தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2025      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை: நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரபலங்கள், பொதுமக்கள் பலரும் அன்னையர் தின வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்:  

அன்னையர் நமக்கு அளித்த உயிர், அன்பு, கருணை, வாழ்க்கை உள்ளிட்ட அனைத்துக்கும் நன்றி சொல்வதற்கான உன்னத முயற்சி தான் அன்னையர் தினம். ஒவ்வொரு வினாடியும் அன்னையை வணங்கிக் கொண்டு, நன்றிக் கடன் செலுத்திக் கொண்டே இருப்போம். அன்னையர் வாழ்க!

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்:  

அதீத அன்புக்கும், அளவற்ற பாசத்திற்கும், அர்ப்பணிப்பு உணர்வுக்கும் சிறந்த அடையாளமாக திகழும் அன்னையர்களை போற்றிக் கொண்டாடும் அன்னையர்களின் தினம் இன்று. அன்பில் இணையற்றவர்களாக, பண்பில் நிகரற்றவர்களாக, பாசத்தில் ஈடற்றவர்களாக எத்தகைய சவால்களையும், சோதனைகளையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு வாழும் தெய்வங்களாக வலம் வரும் அன்னையர்கள் அனைவரையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்: 

அம்மா என்ற சொல்லுக்கு   அன்பு, அர்ப்பணிப்பு, தியாகம், தான் பசித்திருந்து பிள்ளைகளின் பசியாற்றும் பெருந்தன்மை, தம்மை அழித்து பிள்ளைகளுக்கு வெளிச்சமூட்டும் மெழுகுவர்த்தி என அம்மாவுக்கு ஆயிரமாயிரம் வரையறைகள் உண்டு. ஆனால், இவை அனைத்திற்குள்ளும் அடங்காமல் புதிய, புதிய பரிமாணங்களை எடுத்து, அளவில்லாத அன்பை பரிமாறுபவள் தான் அம்மா.  உலக அன்னையர் நாளில் அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம்; அவர்களை என்றென்றும் வணங்குவோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து