முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்ச்சியில் சென்னை மண்டலம் 4-ம் இடம்

செவ்வாய்க்கிழமை, 13 மே 2025      இந்தியா
10th-Exam 2023-04-06

Source: provided

புதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியிடப்பட்ட நிலையில், மொத்தம் 93.66 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) கீழ் உள்ள பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கின.

அதன்படி, பத்தாம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 15 தொடங்கி மார்ச் 18ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த நிலையில் 10-ம் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று 1.30 மணியளவில் வெளியானது. மண்டல வாரியாக திருவனந்தபுரம் 99.79 சதவீதம் பெற்று முதலிடத்திலும். விஜயவாடா 99.79 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், பெங்களூரு - 98.90 சதவீதம் பெற்று மூன்றாமிடத்திலும், சென்னை - 98.71 பெற்று நான்காம் இடத்திலும் உள்ளன.

கடந்த 2024-ல் 25,724 பள்ளிகளில் 7,603 தேர்வு மையங்களிலும், 2025ஆம் ஆண்டில் 26,675 பள்ளிகளில் 7,837 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டது. அதில் 2024ல் தேர்வுக்கு 2,25,1812 மாணவர்கள் பதிவு செய்த நிலையில், 2,23,8,827 பேர் தேர்வெழுதினர். அதில் 2,095,467 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது 93.60 சதவீதமாகும்.

2025ஆம் ஆண்டில் தேர்வுக்கு 2,38,5079 மாணவர்கள் பதிவு செய்த நிலையில், 2,37,1939 பேர் தேர்வெழுதினர். அதில் 2,22,1636 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது 93.66 சதவீதமாகும். அதாவது 2024-2025 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 0.06 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். 

2025ல் மண்டல வாரியாக தேர்ச்சி சதவீதம் - திருவனந்தபுரம் - 99.79, விஜயவாடா - 99.79, பெங்களூரு - 98.90, சென்னை - 98.71, புணே - 96.54, அஜ்மீர் - 95.44, மேற்கு தில்லி - 95.24, கிழக்கு தில்லி - 95.07, சண்டீகர் - 93.71, பஞ்ச்குலா - 92.77, போபால் - 92.71, புவனேஸ்வர் - 92.64, பாட்னா - 91.90, டேராடூன் - 83.45, பிரயாக்ராஜ் - 79.53, நொய்டா - 81.29, குவஹாத்தி - 83.62. மாணவர்கள் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, result.cbse.nic.in, cbse.gov.in என்ற இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து