முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சி கட்டமைப்பு பணியை விரைந்து முடிக்க த.வெ.க. விஜய் அறிவுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 16 மே 2025      தமிழகம்
Vijay 2024-09-09

Source: provided

சென்னை : கட்சி கட்டமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுச்செயலாளர் ஆனந்திடம் நிர்வாகிகளுக்கு விஜய் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.  

தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்கவில்லை பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை தாங்கினார். நிர்வாக ரீதியான 120 மாவட்டங்களை சேர்ந்த செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் சட்டசபை தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்கப்பட்டது. பூத் கமிட்டி மாநாடு தொடர்பாக மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் மாவட்ட அளவில் கட்சியின் வளர்ச்சி பணிகள், மக்கள் ஆதரவு குறித்து மாவட்ட செயலாளர்கள் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு கட்சி தலைவர் விஜய்யிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இதற்கிடையில், விஜய் பங்கேற்காத நிலையில் பொதுச்செயலாளர் ஆனந்திடம் நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன்படி, மே மாதத்துக்குள் கட்சியின் கட்டமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவில் உள்ள சார்பு அணி நிர்வாகிகளை நியமனம் செய்ய வேண்டும். 3.5 லட்சம் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் 70 ஆயிரம் பூக் கமிட்டி பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 6 மாவட்ட செயலாளர்கள், மாநில அளவிலான அணி நிர்வாகிகள் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து