முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பைடன் விரைவில் குணமடைய வேண்டும்: பிரதமர் மோடி பதிவு

திங்கட்கிழமை, 19 மே 2025      இந்தியா
MODI 2023-09-081

Source: provided

புதுடெல்லி : புற்றுநோய் பாதிப்பு: ஜோ பைடன் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு (82) புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் நேற்று முன்தினம் தெரிவித்தது. கடந்த வெள்ளிக்கிழமை (மே 16) அவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், புற்றுநோய் செல்கள் எலும்புக்கு பரவியுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்ததாகவும் ஜோ பைடனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புரோஸ்டேட் புற்றுநோய் பெரும்பாலும் எலும்புகளுக்கு பரவுகிறது என்றும், இதற்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினம் என்றும் கூறப்படுகிறது. ஜோ பைடனும் அவரது குடும்பத்தினரும் அவரது டாக்டர்களுடன் சிகிச்சை விருப்பங்களை மதிப்பாய்வு செய்து வருகின்றனர். என்று பைடனின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜோ பைடன் விரைவில் குணமடைய பல்வேறு நாட்டின் உலக தலைவர்கள் தங்கள் ஆறுதல்களைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில், பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:- நண்பர் ஜோ பைடனின் உடல்நிலை குறித்து கேள்விப்பட்டு மிகவும் கவலையடைந்தேன். அவர் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய நாங்கள் இறைவனை வேண்டிக் கொள்கிறோம். டாக்டர் ஜில் பைடன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் எங்கள் நினைவுகள் உள்ளன" என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து