முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்: நீதிபதியின் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு தள்ளுபடி

புதன்கிழமை, 21 மே 2025      இந்தியா
Yashwant-Verma 2025-03-22

Source: provided

டெல்லி : பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் நீதிபதி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்  மறுப்பு தெரிவித்துள்ளது.

டெல்லி மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இவரது வீட்டில் தீப்பிடிக்க, தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சென்று தீயை அணைத்தனர். அப்போது அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். கோடிக்கணக்கான பணம் தீயில் கருகியது. அவரது வீட்டில் பணம் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா (தற்போது ஓய்வு பெற்றுள்ளார்), 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்தார். இந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. மேலும் நீதிபதி யஷ்வந்த் வர்மா இது தொடர்பாக அளித்த வாக்குமூலத்தையும் பதிவு செய்து தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அளித்தது.

இந்த இரண்டையும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு அனுப்பி வைத்தார். மேலும், இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நீதிபதி யஷ்வந்த் சர்மா மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோர் மறுத்துவிட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து