முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டில்லி புழுதிப் புயலில் சிக்கி சிறுமி உள்பட 3 பேர் பலி..!

வியாழக்கிழமை, 22 மே 2025      இந்தியா
Suicide 2023 04 29

Source: provided

புதுடில்லி: டில்லி யைத் தாக்கிய புழுதிப் புயல் மற்றும் கனமழை காரணமாக  9 வயது சிறுமி உள்பட மூவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

டில்லியில் அதிகப்படியான வெய்யில் கொளுத்திவந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென பெய்த மழையால் புழுதிப் புயல் ஏற்பட்டு, நகரம் முழுவதும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.  டில்லி-நொய்டா, காசியாபாத் மற்றும் குருகிராம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. புழுதிப் புயலுக்கு 9 வயது சிறுமி உள்பட மூவர் பலியாகியுள்ளனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.

சஹானா என்கிற சாந்தினி ஒரு கட்டடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து இரும்பு ஜன்னல் பலகை விழுந்ததில் உயிரிழந்தார். அவர் உடனடியாக சிவில்லைன்ஸில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து வீட்டின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தென்கிழக்கு டில்லியின் நிஜாமுதீன் பகுதியில் லோதி சாலை மேம்பாலம் அருகே இடியுடன் கூடிய மழையின்போது மின்கம்பம் சரிந்து சாலையில் அந்த வழியாகச் சென்ற மாற்றுத்திறனாளி மீது விழுந்ததில், அவர் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மற்றொரு சம்பவத்தில், வடகிழக்கு டில்லியின் கோகுல்புரி பகுதியில் மரம் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது விழுந்ததில் அசார்(22) என்பவர் இறந்தார்.

முகர்ஜி நகர் அருகே உள்ள ஒரு பழைய நடைபாதை மேம்பாலத்தின் கிரில்லின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 6 பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. காஷ்மீர் கேட், மங்கோல்புரி பகுதியிலிருந்து மேலும் காயங்கள் பதிவாகியுள்ளன. புதன்கிழமை மாலை டில்லியில் ஏற்பட்ட கடுமையான வானிலை மாற்றத்தின் காரணமாக இந்த இறப்புகள், காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து