முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கம்புணரி குவாரி விபத்து: இருவர் கைது; உரிமையாளர் தலைமறைவு

வெள்ளிக்கிழமை, 23 மே 2025      தமிழகம்
Jail

சிங்கம்புணரி, சிங்கம்புணரி அருகே கல் குவாரியில் பாறை சரிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் இருவரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள குவாரி உரிமையாளரை தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் தனியார் கல் குவாரி உள்ளது. இங்கு மே 20-ம் தேதி 400 அடி ஆழ பள்ளத்தில் பாறை சரிந்து விழுந்ததில் பொக்லைன் ஓட்டுநர் உட்பட பல தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து குவாரி உரிமத்தை தற்காலிகமாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ரத்து செய்தார். இச்சம்பவம் குறித்து குவாரி உரிமையாளர் மல்லாக்கோட்டையைச் சேர்ந்த மேகவர்ணம் (48) மீது டிஎஸ்பி செல்வகுமார் தலைமையிலான எஸ்.எஸ்.கோட்டை போலீஸார் வழக்கு பதிந்தனர். மேகவர்ணம் தலைமறைவான நிலையில், அவரின் தம்பி கமலதாசன் (45), மதுரை மாவட்டம் இ.மலம்பட்டியைச் சேர்ந்த குவாரி மேற்பார்வையாளர் கலையரசன் (32) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேகவர்மனை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து