எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, நகர்ப்புர உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு தேவைப்படும் நிதிக்காக பல்வேறு நவீன நிதி திரட்டும் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சியின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வினை முதல்வர் ஸ்டாலின் மணி ஒலித்து தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (மே 26) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சியின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வினை மணி ஒலித்து தொடங்கி வைத்தார்.
நகர்ப்புர உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு தேவைப்படும் நிதிக்காக பல்வேறு நவீன நிதி திரட்டும் முன்னெடுப்புகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியில் சென்னை மாநகராட்சி நகர்ப்புர நிதிப் பத்திரங்கள் மூலம் உட்கட்டமைப்பு திட்டத்துக்கு நிதி திரட்டியது ஒரு முக்கிய நிகழ்வாகும். சென்னை மாநகராட்சி 10 ஆண்டு காலத்துக்கு, ஆண்டுக்கு 7.97% என்ற மிகவும் குறைந்த வட்டி விகிதத்தில் 200 கோடி ரூபாய் நகர்ப்புர நிதிப் பத்திரங்களை வெற்றிகரமாகத் திரட்டியது. 2025-ம் ஆண்டில் இந்தியாவில் இதுவரை வெளியிடப்பட்ட நகர்ப்புர நிதிப் பத்திர வெளியீடுகளிலும் இதுவே மிகக் குறைந்த வட்டி விகிதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெளியீட்டுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. அதன்படி 100 கோடி ரூபாய் அடிப்படை வெளியீட்டுத் தொகையை விட 4.21 மடங்கு அதிகமாக, அதாவது 421 கோடி ரூபாய் மதிப்பிலான ஏலங்கள் தேசிய பங்குச் சந்தையின் மின்னணு ஏலம் மூலம் பெறப்பட்டன. இது சென்னை மாநகராட்சியின் வலுவான நிதி மேலாண்மை மற்றும் திட்டத்தின் கட்டமைப்பிற்கு முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ள வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்த நகர்ப்புர நிதிப் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்ட நிதி, கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைப்பிற்கு பயன்படுத்தப்படும். இது சென்னையின் வெள்ளத் தடுப்பு மற்றும் நிலையான நகர்ப்புர வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முக்கியமான உட்கட்டமைப்பு திட்டமாகும். கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் 8 பெரிய ஏரிகளும், 71 சிறிய நீர்நிலைகளும் உள்ளன. இந்த ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் கட்டுமானம் 46 தொகுப்புகளாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மே 22-ம் தேதி நிலவரப்படி, 30 தொகுப்புகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள 16 தொகுப்புகளுக்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் நீர் சேமிப்புத் திறனை இரட்டிப்பாக்கி, பருவமழையின் போது மழைநீர் தேக்கத்தைத் தடுக்கவும், கோடைக் காலத்தில் நீர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் உதவுகிறது. மழைநீர் வடிகால்கள் அருகிலுள்ள ஏரிகளுடன் இணைக்கப்படுவதால், அதிகப்படியாக வெளியேறும் மழைநீர் சேமிப்புக்காக ஏரிகளுக்கு திருப்பி விடப்படுகிறது.
சென்னை மாநகராட்சியின் நகர்ப்புர நிதிப் பத்திரங்களுக்கு இந்தியா ரேட்டிங்ஸ் மற்றும் அக்யூட் ரேட்டிங்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் ‘ஏஏ+’ என தரமதிப்பீடு செய்துள்ளன. இது சென்னை மாநகராட்சியின் சீரிய நிதி மேலாண்மையை எடுத்துக்காட்டுகிறது. சென்னை மாநகராட்சியை ஊக்குவிக்கும் நோக்கத்திலும், முதலீட்டாளர்களின் நம்பகத் தன்மையை வலுப்படுத்தும் விதமாகவும் தமிழக அரசு பி.எஸ்.ஜி.எப். திட்டத்தின் கீழ் சிறப்பு நிதி உதவியை ஏற்படுத்தியுள்ளது.
கூடுதலாக, மத்திய அரசின் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் நகர்ப்புர நிதிப் பத்திர வெளியீட்டு ஊக்கத்தொகையாக மாநகராட்சிக்கு 26 கோடி ரூபாய் ஊக்கத்தொகையும் பெறப்படும். இது நகர்ப்புர நிதிப் பத்திரங்கள் மூலம் நிதியினைத் திரட்டும் செலவினை மேலும் குறைத்திட உதவும். முன்னதாக, தமிழக முதல்வர் சென்னை மாநகராட்சியின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் விழாவில், பத்திர வெளியீட்டின் அனைத்து பங்கு முகவர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 1 day ago |
-
ரிசர்வ் வங்கியின் தங்க நகைக்கடன் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மத்திய நிதியமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்
28 May 2025சென்னை, தங்க நகைக்கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை
-
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னதை செய்திருக்கிறார்: கனிமொழி எம்.பி.
28 May 2025சென்னை, அண்ணா பல்கலைக்கழக வழக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னதை செய்திருக்கிறார் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் ஐந்தே மாதத்தில் நீதியை பெற்று தந்த காவல்துறை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
28 May 2025சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் ஐந்தே மாதத்தில் நீதியை காவல்துறை பெற்று தந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
கன்னடம் மொழி குறித்து பேச்சு: கமலுக்கு கர்நாடக முதல்வர் கண்டனம்
28 May 2025பெங்களூரு, தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று பேசிய கமலுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
கிருஷ்ணகிரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி
28 May 2025சென்னை, கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அசோக்குமார் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க.
-
சற்று குறைந்தது தங்கம் விலை
28 May 2025சென்னை, தங்கம் விலை கடந்த மாதம் (ஏப்ரல்) 22-ம் தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.
-
மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க கச்சதீவு மீட்பு ஒரே வழி: திருவொற்றியூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
28 May 2025சென்னை, தமிழக மீனவர்களின் இன்னல்களை போக்க அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க கச்சதீவை மீட்புதான் ஒரே வழி என்று திருவொற்றியூரில் புதிய மீன்பிடி துறைமுகத்தை திறந்து வைத்து முத
-
கமலின் குரல் மாநிலங்களவையில் ஓங்கி ஒலிக்கும்: துணை முதல்வர்
28 May 2025சென்னை, கமலின் குரல் மாநிலங்களவையிலும் இனி ஒலிக்கும் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
எல்லை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்த பாக். பெண்
28 May 2025மும்பை, எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
-
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
28 May 2025சென்னை, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
பேச்சுவார்த்தை தோல்வி: டேங்கர் லாரி உரிமையாளர்கள் 6-வது நாளாக வேலைநிறுத்தம்
28 May 2025மீஞ்சூர், பேச்சுவார்த்தை தோல்வி காரணமாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் 6-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
வீர சாவர்க்கரின் போராட்டத்தின் வரலாறை தேசம் ஒருபோதும் மறக்காது - பிரதமர் மோடி
28 May 2025புதுடெல்லி, வீர சாவர்க்கரின் போராட்டத்தின் வரலாறை தேசம் ஒருபோதும் மறக்காது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
-
சென்னை உள்ளிட்ட 4 ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் இடமாற்றம்: சுப்ரீம் கோர்ட்டுக்கு கொலீஜியம் பரிந்துரை
28 May 2025புதுடெல்லி, சென்னை உள்ளிட்ட 4 ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுவதாக சுப்ரீம் கோர்ட் கொலீஜியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
-
ஒரே போட்டியில் 3 வரலாற்று சாதனைகள் படைத்த கோலி
28 May 2025லக்னோ, லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கோலி 30 பந்துகளில் 54 ரன்கள் அடித்தார். பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 2 ஆம் இடம் பிடித்தது.
-
மற்ற படங்களுக்கும் இசையமைக்கப் போகிறேன் - விஜய் ஆண்டனி
28 May 2025விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள படம் ‘மார்கன்’. இதில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார்.
-
கரும்பு நிலுவைத் தொகை வழங்க உத்தரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விவசாயிகள் நன்றி
28 May 2025சென்னை, சர்க்கரை ஆலைகளால் கரும்பு பணம் நிலுவையின்றி முழுமையாக வழங்கிய முதல்வருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
-
அண்ணா பல்கலை., வழக்கின் தீர்ப்புக்கு இ.பி.எஸ். வரவேற்பு
28 May 2025சென்னை, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் நீதிமன்ற தீர்ப்புக்கு இ.பி.எஸ். வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
ம.நீ.ம. மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு: செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம்
28 May 2025சென்னை, வரும் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக அக்கட்சித் தலைவர் கமல்ஹாசனை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற
-
அமெரிக்காவுடன் இணைந்தால் கனடாவுக்கு அதிநவீன பாதுகாப்பு: அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
28 May 2025வாஷிங்டன், கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறினால், கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்பில் கனடா இலவசமாக இணையலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி: சென்னை மகளிர் நீதிமன்ற பரபரப்பு தீர்ப்பு
28 May 2025சென்னை, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி தீர்ப்பளித்துள்
-
மணிப்பூரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
28 May 2025இம்பால், மணிப்பூரில் ஒரே நாளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
-
6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: கோவை, நீலகிரிக்கு அடுத்த 2 நாட்களுக்கு ‘ரெட் அலர்ட்’
28 May 2025சென்னை, நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னி
-
காசா மக்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி
28 May 2025காசா : உதவி மையத்தின் மீது இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார், 48 பேர் காயமடைந்தனர் என்று காசா அதிகாரிகள் தெரிவித்தனர்
-
தீவிரவாதிகள் தாக்குதல்களுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம்: முதல்வர் உமர் அப்துல்லா கருத்து
28 May 2025ஸ்ரீநகர், பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்தியது போன்ற கோழைத்தனமான தாக்குதல்களுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சமாட்டோம் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று தெ
-
4 உக்ரைன் கிராமங்களை கைப்பற்றிய ரஷ்யப்படை
28 May 2025கீவ், ரஷ்ய எல்லையில் உள்ள உக்ரைனின் சுமி பிராந்தியத்தின் கவர்னர், உக்ரைனின் 4 கிராமங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார்.