முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக டெல்லியில் சி.ஆர்.பி.எப். வீரர் கைது

திங்கட்கிழமை, 26 மே 2025      இந்தியா
Jail

புதுடெல்லி, பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகளுடன் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்காக தேசிய புலனாய்வு முகமை  சி.ஆர்.பி.எப். பணியாளர் ஒருவரைக் கைது செய்தது.  

குற்றம் சாட்டப்பட்ட மோதி ராம் ஜாட் என்ற அந்த நபர் சி.ஆர்.பி.எப்.-இல் உதவி துணை ஆய்வாளராகப் பணியாற்றி வந்துள்ளார். உளவு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்ட அவர், 2023 முதல் தேசிய பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் பல்வேறு வழிகள் மூலம் பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகளிடமிருந்து நிதி பெற்றதாக என்.ஐ.ஏ. கண்டறிந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த மோதி ராம் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றங்களில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூன் 6 ஆம் தேதி வரை என்.ஐ.ஏ. காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானுடனான மோதி ராம் ஜாட்டின் தொடர்புகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து சி.ஆர்.பி.எப்., மோதி ராம் ஜாட்டை நேற்று பணியிலிருந்து நீக்கியது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 14 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 15 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து