முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'நரிவேட்டை' திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 26 மே 2025      சினிமா
Narivettai-movie-review 202

Source: provided

கதையின் நாயகனாக மிக அழகாக பொருந்தியிருக்கிறார் டோவினோ தாமஸ். சரியான வேலை கிடைக்காமல் சுற்றி வருகிறார் டோவினோ தாமஸ். நன்கு படித்தும், பெரிய வேலைக்குத் தான் செல்வேன் என்று காத்திருக்கிறார். காதல் கைகூட வேண்டும், தனது அம்மாவின் கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காக போலீஸ் கான்ஸ்டபிள் வேலைக்குச் செல்கிறார் டோவினோ.

எப்படியாவது தேர்வெழுதி சீக்கிரமாகவே அங்கிருந்து சென்று பெரிய அதிகாரி இடத்தில் அமர வேண்டும் என்ற எண்ணத்தில், போலீஸ் ட்ரெய்னிங்கில் இருந்து கொண்டே தனது படிப்பினை தொடர்ந்து கொண்டிருக்கிறார் டோவினோ. இதேசமயத்தில், மலைவாழ் கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளான நிலம், வீடு உள்ளிடவற்றைக் கேட்டு அரசிடம் போராடி வருகின்றனர். இவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக போலீஸ் உயரதிகாரி சேரன் தலைமையில், அங்கு போலீஸ் குவிக்கப்படுகிறது. போராட்டம் நாட்கணக்கில் செல்ல, போலீஸாரும் அங்கு டெண்ட் அமைத்து தங்கிவிடுகின்றனர். போலீஸ் வேலை என்றால் என்ன என்பதை அவ்வப்போது டோவினோவிற்கு கூறும் ஹெட் ஹான்ஸ்டபிளாக வருகிறார் சுரஜ். மலைகிராம மக்களின் போராட்டம் என்னவானது. என்பதே படத்தில் சுவாரசியமூட்டும் கதை.மிக அழகாக திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். அதிகாரத்தின் உச்சவரம்பானது எதுவரை எல்லை மீறும் என்பதையும் மிக அழகாகவே கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார். மொத்தத்தில் இந்த 'நரிவேட்டை'தங்கள் உரிமைக்கான போராட்டம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 20 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 21 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து