முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.3,400 கோடி மதிப்பிலான சொத்தை நன்கொடையாக அளித்தார் நடிகர் ஜாக்கிசான்

திங்கட்கிழமை, 26 மே 2025      சினிமா
Jeki-Jhon2025-04-29

Source: provided

சீனா, : ஏழை மக்களின் படிப்புக்காக தனது ரூ.3,400 கோடி சொத்தை நன்கொடையாக  ஜாக்கி சான் வழங்கியுள்ளார்.

90ஸ் கிட்ஸ்களின் நாயகான திகழ்பவர் நடிகர் ஜாக்கி சான். இவர் 'தி லெஜெண்ட் ஆப் டிரங்கன் மாஸ்டர், போலீஸ் ஸ்டோரி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபல மானவர். புரூஸ் லீ-க்கு பிறகு அதிரடி ஆக்சன் காட்சிகளால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர், ஜாக்கிசான். இவரின் அசாத்திய சண்டை காட்சிகளுக்கென்றே உலகம் முழுவதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதற்கிடையில் தற்போது ஜாக்கி சான் 'கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 30-ந் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில் ஜாக்கிசான் தனது சொத்தை நன்கொடையாக அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் தனது ரூ.3,400 கோடி சொத்துக்களை ஏழை மக்களின் படிப்புக்காகவும், இயற்கை பேரிடர்களுக்கும் தனது ஜாக்கிசான் சாரிடபிள் பவுண்டேஷன் மூலம் நன்கொடையாக வழங்கியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, சிறிய வயதில் வறுமையால் தவித்திருக்கிறேன். அந்த கஷ்டம் எனக்கு தெரியும். நான் பட்ட கஷ்டங்கள் மற்றவர்கள் படக்கூடாது என்பதால்தான் இந்த முயற்சி. மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது வரும் சந்தோஷம் அளவிட முடியாதது, என்று குறிப்பிட்டார். ஏழை மக்களுக்காக தனது சொத்துக்களை வழங்கியுள்ள ஜாக்கிசானுக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 14 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 15 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து