முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.சி.பி. அணி புதிய சாதனை

திங்கட்கிழமை, 26 மே 2025      விளையாட்டு
RCB 2024-03-20

Source: provided

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இன்றுடன் லீக் போட்டிகள் முடிவடைகிறது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் குஜராத், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஐ.பி.எல். தொடரில் விளையாடி வரும் அனைத்து அணிகளும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் (இன்ஸ்டாகிராம், எக்ஸ்) புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகின்றன. இதன்காரணமாக அணிகளின் சமூக வலைத்தள பக்கங்களை ரசிகர்கள் ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். 

அந்த வகையில், சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை ஆர்.சி.பி. அணி படைத்துள்ளது. அந்த அணிக்கு அடுத்தபடியாக 18.6 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் சி.எஸ்.கே. அணி 2-வது இடத்திலும், 18 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

________________________________________________________________________________________________________________

சாதனைகளை குவித்த கிளாசன்

ஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ச் ஐதராபாத் அணி- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஐதராபாத் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்ரிச் கிளாசன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஹென்ரிச் கிளாசென் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். அதன்படி இப்போட்டியில் கிளாசென் 37 பந்துகளில் சதத்தை பதிவுசெய்து அசத்தியதன் மூலம் ஐ.பி.எல். தொடர் வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த 3-வது வீரர் எனும் சாதனையை சமன்செய்துள்ளார். முன்னதாக கடந்த 2010-ம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதான் 37 பந்துகளில் சதமடித்து அசத்திய நிலையில், தற்சமயம் ஹென்ரிச் கிளாசன் அவரின் சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார்.  இதுதவிர்த்து ஐ.பி.எல். தொடர் வரலாற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக அதிவேக சதமடித்த வீரர் எனும் சாதனையையும் ஹென்ரிச் கிளாசென் படைத்துள்ளார். 

________________________________________________________________________________________________________________

தமிழில் பதிவிட்ட சி.எஸ்.கே. வீரர்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் பெரும் பின்னடைவை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது கடைசிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று, போட்டியில் இருந்து வெளியேறியது. மொத்தம் 14 போட்டிகளில் 4 இல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் சென்னை அணி உள்ளது.

இந்த நிலையில், புகைப்படங்களைப் பகிர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள கலீல் அகமது வெளியிட்ட பதிவில், “அடுத்த முறை சந்திக்கும் வரை சென்னை மற்றும் சூப்பர் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த சீசன் தொடக்கத்தில் சென்னை அணிக்காக அபாரமாக பந்துவீசிய கலீல் அகமது, இரண்டாவது பாதியில் பார்மை நீடிக்க முடியவில்லை. மொத்தம் 14 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள கலீல் அகமது, 46.4 ஓவர்கள் வீசி 447 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார்.

________________________________________________________________________________________________________________

ஆர்.சி.பி. அணியில் முசராபானி

ஐ.பி.எல். கிரிக்கெட் 2025 சீசன் லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. ஆர்.சி.பி.  புள்ளிகள் பட்டியலில் 3 ஆவது இடத்தை பிடித்து பிளேஆப் சுற்றை உறுதி செய்துள்ளது. இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் பெங்களூரு அணி மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் முதல் இரண்டு இடங்களுக்குள் பிடித்து குவாலிபியர் 1 போட்டியில் பெங்களூரு அணி விளையாடும். லீக் போட்டிகள் முடிவடைந்த பின்னர், வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் அவர்களுடைய நாட்டுக்காக சர்வதேச போட்டிகளில் விளையாட சென்றுவிடுவார்கள் என ஐ.பி.எல். நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறிய அணிகள் மாற்று வீரர்களை தேர்வு செய்து வருகின்றன. அவ்வகையில், லுங்கி இங்கிடிக்கு பதிலாக, ஆர்.சி.பி. அணியில் ஜிம்பாப்வே வீரர் பிளசிங் முசராபானி. இணைந்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பயிற்சிக்காக தென்னாப்பிரிக்க அணியுடன் லுங்கி இங்கிடி இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

________________________________________________________________________________________________________________

சுனில் நரைன் புதிய சாதனை

ஐ.பி.எல். தொடரின் 68-வது லீக் போட்டி புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதரபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 278 ரன்கள் குவித்தது.  இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா அணி  இறுதியில்,  18.4 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 110 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்தார். கொல்கத்தா அணிக்காக 198 போட்டிகளில் விளையாடியுள்ள நரைன் 210 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்பு நாட்டிங்ஹாம்ஷையர் அணிக்காக இங்கிலாந்தின் சமித் படேல் 208 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 14 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 15 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து