முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: டீசல்-பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

செவ்வாய்க்கிழமை, 27 மே 2025      தமிழகம்
LPG-Tanker-Lorry-strike

திருவள்ளூர், டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக  டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் பாரத் பெட்ரோலிய முனையம் இயங்கி வருகிறது.  இங்கிருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதற்காக 150 லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் அண்மையில் பாரத் பெட்ரோலிய நிர்வாகம் சார்பில் கோரப்பட்ட புதிய ஒப்பந்தப்புள்ளியில்  15% வாடகையை குறைத்து நிர்ணயம் செய்யப்பட உள்ளது என்று  அறிவிக்கப்பட்டது. இதற்கு டேங்கர் லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை கண்டித்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் 3 நாட்களுக்கு டேங்கர் லாரி உரிமையாளர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் டேங்கர் லாரி உரிமையாளர்களுடன், பெட்ரோலிய நிர்வாகத்தினர் நடத்தி பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை.  

இதனையடுத்து, டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்து அதனை அறிவித்துள்ளனர். இதேபோன்று தண்டையார்பேட்டையில் இருந்து விமானங்களுக்கு கொண்டு செல்லப்படும் பெட்ரோல் டேங்கர் லாரிகள் மற்றும் அத்திப்பட்டில் இருந்து இயக்கப்படும் டேங்கர் லாரிகள் முழுவதும் நிறுத்தப்பட்டு உள்ளது என சங்கத்தின் தலைவர் மூர்த்தி கூறியுள்ளார். டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட கூடிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 14 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 15 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து