முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஹல்காமில் அமைச்சரவைக் கூட்டம்: சுற்றுலாவை மீட்க ஒமர் நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை, 27 மே 2025      இந்தியா
Umar-Abdullah 2023-10-27

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாவை மீட்க பஹல்காமில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று  முதல்வர் ஒமர் அப்துல்லா  தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி தெற்கு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியதால், ஜம்மு - காஷ்மீரில் மிகுந்த பதற்றம் நிலவியது. இதனால், ஜம்மு - காஷ்மீர் செல்வதை சுற்றுலா பயணிகள் தவிர்த்து, தங்களின் பயணங்களை ரத்து செய்தனர். இதனால், சுற்றுலாத் தலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் குறைந்துள்ள நிலையில், சுற்றுலாவை மீட்க ஜம்மு - காஷ்மீர் முதல்வர் முக்கிய முடிவை எடுத்துள்ளார். தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் மாநில அமைச்சரவைக் கூட்டம்   நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர், மாநில அமைச்சர்கள், மூத்த ஐஏஎஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

தொடர்ந்து, பஹல்காமில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுடன் சுற்றுலாவை மீட்டெடுப்பது குறித்து அமைச்சர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர். இதன்மூலம், காஷ்மீர் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான இடமென்றும், கவலை தேவையில்லை என்றும் நாட்டு மக்களுக்கு முதல்வர் ஒமர் அப்துல்லா உணர்த்த முயற்சிக்கிறார். தொடர்ந்து ஸ்ரீநகர், சோனமார்க், குல்மார்க் உள்ளிட்ட பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள ஹோட்டல்களிலும் அடுத்தடுத்து அமைச்சரவைக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 20 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 21 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து